பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 29 நமக்குக் கூட ஞானம் வருது. ஆனால் அது எவ்வளவு நேரம் நிற்கிறது? சர்க்கரை சாப்பிடக்கூடாது என்று சொல்றாங்க. நானும் சாப்பிடக் கூடாது என்றுதான் நினைக்கிறேன். எதுவரையிலே...? பார்த்துட்டாக் கொஞ்சம் சாப்பிடத் தோணுது. சாப்பிடறதுன்னு வந்தாச்சு. இதிலே பாதி சாப்பிடுறது கொஞ்சம் சாப்பிடது என்ன இனி? என்னுடைய புலனடக்கம் அவ்வளவுதான். நான் என்ன செய்ய முடியும்? சுக்கிரீவன் நம் படைப்பைச் சேர்ந்தவன். எங்கப்பா எனக்காகவே ஒரு கதை சொல்வார். குரங்கு ஒண்னு அமாவாசை விரதம் இருக்கணும்னு நினைச்சுதாம். அது அமாவாசை அன்னிக்கு வெள்ளரித் தோட்டத்திலே உட்கார்ந்து இருந்தது. கொஞ்சம் நேரம் ஆனவுடன் குரங்கு நினைச்சது. விரதம்தானே இருக்கணும். வெள்ளரிப் பிஞ்சைப் பறிச்சுக் கையிலே வச்சுருந்தா தப்பு இல்லையே! என நினைச்சது. உடனே பறிச்சு கையிலே வச்சுண்டது. அப்புறம் நினைச்சது, சாப்பிடத் தானே கூடாது. கடிச்சு கடிச்சுத் துப்பிடுவமே, என்று. அப்புறம் கடிச்சு கடிச்சுதுப்பிச்சு. நம்ம வீட்டிலெல்லாம் சாமிக்குப் படைக்கணும்னு தயார் பண்ணும்போது இப்படித்தான். சமயல் செய்றவங்கள் உப்பு சரியாக இருக்கா என்று பாக்க கொஞ்சம் கடிச்சுப் பார்த்துத் துப்பிடுவாங்க அதுபோல். அப்புறம் கடிச்சுத் துப்புறதை மென்னு மென்னு துப்பிட்டா என்ன என நினைச்சது.