பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.ச.ஞா எனும் தமிழ்க்கேணி தேதி தெரியாததொரு நாளில், மாலைப் பொழுதில், பேராசிரியர் அ.ச.ஞா பேசிய தொட்டனைத்துறும் மணற்கேணி என்ற தலைப்பிட்ட சொற்பொழிவை ஒலிப் பேழையில் கேட்க நேர்ந்தது. அசந்து போனேன். அது இன்று புத்தகமாகக் காலப் பெட்டகத்திற்குள் வைத்துக் காப்பாற்றப்பட இருக்கிறது என்பது சிறந்த கருத்துகளை வாசிக்கவும், நேசிக்கவும் செய்யும் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி. நாம் செய்ய வேண்டியதையெல்லாம் அறியாமையை அகற்றுவதுதான். மணலை நீக்குவது தான்; தண்ணீரைக் கொட்டுவதல்ல. அறிவை நம்முடைய அறியாமை மூடி இருக்கிறது அவ்வளவு தான். - கல்வி என்பது ஒவ்வொரு நிமிடமும் நிகழ்வது; 'ஆஹா இவ்வளவு நேரம் இது கூட நமக்குத் தெரியாமல் நாம் இருந்திருக்கிறோமே என்று நம்மை நாமே புதுப்பித்துக் கொள்வது. பல நேரங்களில் நமக்குள் ஒலிக்கும் குரலை புற சப்தங்களிலிருந்து மீட்டெடுப்பது. அது ஆறாவது அறிவைத் தாண்டியது. ஆறாவது அறிவு ஐந்து புலன்களையும் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் கடிவாளமாக இருக்கிறது.