பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்புலன்களையும் கடப்பது எந்த நிலை? அது ஏழாவது அறிவு அது ஒருமித்த உள்ளுணர்வா? உள்ளே ஒலிக்கும் குரலா? intuition ஆ2 படிப்பதற்கும், கற்றுக் கொள்வதற்கும் வயது இல்லை. அதைத்தான் பேராசிரியர் அ.ச.ஞா செய்தார். விழிகள் பழுதடைந்த பிறகும் படித்தார்; எழுதினார்; உழைத்தார். அவர் வாழ்க்கைக்கும், இந்தச் சொற் பொழிவின் மூலக்கருத்துக்கும் மயிரிழையளவு கூட இடைவெளி இல்லை என்பதை அவரைத் தெரிந்தவர்கள் அறிந்தவர்கள். - 'சரயூ நதி குறித்து கம்பர் செய்த தவறை சேக்கிழார் சரி செய்த விதம் பற்றி அவர் கூறும் அழகு.... அபாரம். அக்கினிக் குஞ்சுக்கும் தீயினை நயப்புறுதலுக்கும் அவர் போடும் முடிச்சும், ஆளவந்தார் குறித்த சம்பவமும், 'சும்மா இரு சொல்லற என்பதற்கான விளக்கமும் நம்மைத் தமிழ் இலக்கியங்களினூடே கைபிடித்து அழைத்துச் செல்லும் ஓர் இனிய பயணமாக மிளிர்கிறது. - எண்ணமற்று இருப்பதே தியானம்; சொல்லற்று இருப்பதே மெளனம்; மனமற்று நிலைப்பதே ஞானம். வெளியே தேடுவது மட்டுமே மகிழ்ச்சியை விளை வித்து விடாது; வெளியில் செல்வம் எவ்வளவு சேர்ந்தும் இனிமையற்று இருப்பவர்களே அதிகம். உள்ளே தோண்டும் போது ஏற்படுவது சுகம் மட்டுமல்ல; அது நமக்குள் நடக்கும் இரசவாதம்.