பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V 'சான்றோர் கவி' என்பது ஆழத்தைக் குறிப்பது; ஆழமென்று தெரியாத ஆழம். உண்மை; ஆழமென்று தெரியாத ஆழமும், உயரமென்று தெரியாத உயரமும், அழகென்று தெரியாத அழகும் மேன்மையானவை . இறங்கிப் பார்த்தவர்களே ஆழத்தை உணர முடியும். ஏற முடிந்தவர்களே உயரத்தை உணர இயலும். பொறிகள் பற்றி பல மேற்கோள்கள் கொடுத்து பேராசிரியர் தரும் விளக்கம் நம்மை சிலிர்க்க வைக்கிறது. சொற்பொழிவு முழுவதும் அவர் நிரம்பி வழிகிறார். அவர் சொல்கிறார். ‘வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும் வாழ்க்கைக் கென்று ஒரு பொருள் இல்லை; அதன் அர்த்தத்தை நாம் தான் தேடிப் பிடிக்க வேண்டும். எந்தத் தயாரிப்புமில்லாமல் அந்த இடத்திலேயே (extempore) நிகழ்த்திய சொற்பொழிவு என்பதை மனத் தில் நிறுத்தி வாசிப்பவர்கள், இந்நூலில் சரமாரியாக வந்து விழும் கருத்துகளையும், மில்டன், ஷேக்ஸ்பியர் முதல் பாரதி வரை வந்து கொட்டுகிற கவிதை வரிகளையும் இன்னும் அதிகமாக சுவைக்க முடியும். அவர் மேடைப் பேச்சுகளைக் கேட்டவர்கள், இதை ஏற்ற இறக்கங்களுடன் அவருடைய கம்பீரமான குரலில் நினைவுபடுத்தி மகிழவும் முடியும். 'ஊறுவது நம் செயல் இல்லை என்கிறார். ஊறுவதற் கான பக்குவத்துடனாவது இருக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது.