பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

yi 'பசுமட் கலத்துள் பெய்த நீர் எப்படி திடீரென உடைந்துவிடும் என நம்மை அவர் எச்சரிக்கிறார். அனுபவத்துடன் இயையாத அறிவு, இப்படிப்பட்ட கருத்துகளை உணரக்கூட இயலாது. ஒழுகுவது வேறு; நிரம்பி வழிவது வேறு. மந்திரம் பற்றி பேசுகிறார். மந்திரத்தில் மாத்திரம் மகிமை இல்லை; நாம் தயாராக இருக்கிறோமா என்பதும், நாம் எவ்வளவு தூரம் ஒப்படைக்கிறோம் என்பதும் தான் முக்கியம். முட்டாள்கள் மூவர் தண்ணீரில் நடந்தது பற்றி டால்ஸ்டாய் கதை எழுதினார். நாமும் கண்ணப்பனார் பற்றி படித்தோம். நம்பிக்கையும், அன்பும் முழுமையாக இருக்கும் போது வைதல் கூட வாழ்த்தாக மாறும்; புல் கூட புட்பமாக மாறும்; கல் கூட கல்கண்டு ஆகும்; மாமிசம் கூட நைவேத்யம் ஆகும்; உமிழ்நீர் கூட அபிடேகமாகும். 'ஊழை எப்படிப் புறமுதுகு காண முடியும் என்பது அவர் தந்த உதாரணம் எவ்வளவு நேர்த்தியானது! இங்கு பலர் வரத்தையே சாபமாக்கிக் கொள்ளுகிறார்கள்; சிலரோ சாபத்தையே வரமாக மாற்றி விடுகிறார்கள். தண்டனையையே பரிசாக நினைக்கும் பக்குவம் வந்தால் ஊழ் என்ன செய்ய முடியும். மரணத்தின் போது வாழ்ந்த திருப்தி இல்லாவிட்டால் வாழ்ந்துதான் என்ன பயன்? 'மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஒர் என்பது No time, No space என்று பொருள்படும் என்கிறார். பல துறைகளிலும் அவருக்கு இருக்கும் விசாலமான வாசிப்பு