பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தொட்டனைத்துறும் மணற்கேணி விவசாயிகளைப் பற்றி எழுதியிருக்கிறது பொருளாதாரப் பாடமாகும். நம்ப முடியாத பயங்கரமான புறநோக்கு ஆள் அவர். சட்டை கிட்டை ஒண்ணும் இருக்காது. சுவா ரஸ்யமான இடம். அவர் கம்பர் விழாவுக்குப் போகும் போது மூணு நாலு தடவை கூட்டிண்டு போயிருக்கேன். ஒரு நாள் என்னைக் கேட்டார். 'எப்படிடா போறே? - போயா நீ பஸ்ஸிலே போ' என்று சொல்லிவிட்டேன். 'இல்லை உன் கூடத்தான் வரப்போறேன். என் வீட்டுக் காரி என்ன பண்ணினா - டிரைவரைக் கூப்பிட்டு 'ஜாக்கிரதை, அவர் பார்க்கிறதுக்கு அப்பாவி மாதிரி இருப்பாரு. வித்தியாசமா நடந்துக்காதே’ என்றெல்லாம் உபதேசம் பண்ணி அவனை அனுப்பிச்சா. அவர் கீழே படுத்துக்கிட்டிருந்தார். அவரை அழைத்து வர என் டிரைவர் போனான். 'யாரப்பா நீ என்றார். 'ஓ ஐயரே' என்றான்! நான் இவர் வீட்டிலேயிருந்து வரேன் - இந்த வீட்டு ஐயரைக் கூப்பிட்டு வரச் சொன்னாரு , என்றான். அவர் ஒரு படுக்கையைச் சுருட்டி எடுத்துக்கொண்டு வந்தார். டிரைவர் 'யோ, மூளையிருக்கா உனக்கு - நாலுபேர் போகணும் - பெட்டி படுக்கைக் கெல்லாம் எங்கே இடமிருக்கு வைய்யா - என்று சொல்ல, அவர் அதைக் கொண்டு போய் வச்சுட்டார். 'நான் தான் சொல்லியாச்சில்லையா என்று டிரைவர் சொல்லி, ஐயர் வருவார் என்று கையைக் கட்டினு நிக்கிறான். இவர் வந்து வண்டியிலே ஏறினவுடன், அவனுக்கு உயிரே போயிடுச்சு. அங்கேயிருந்து என் வீட்டுக்குத் திரும்பி வந்தவுடனே, வீட்டுக்குப் பின்புறம் ஓடினான் 'அம்மா, அம்மா என்று கத்திண்டு. என் வீட்டுக்காரியோ