பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தொட்டனைத்துறும் மணற்கேணி நம்பமாட் டீர்கள், கண்ணை மூடிண்டு எடுத்தேன். டேய் பிடிச்சுட் டேன்டா. பிராமணத்திலே இத்தனாவது பிராமணத்திலே இருக்குடா இது என்றார். கருட வியூகம் என்று ஒரு யாகம். கருட வியூகம்னா கருடன் மாதிரி திருமந்திரம். ஆயிரத்தெட்டு இஷ்ட காமம் (செங்கல்) - வச்சுக்கட்டணும் கருடன் மாதிரி இறக்கை வைச்சு, மூக்கு வைச்சு, உடம்பு வைச்சு, வால் வைச்சு, செங்கல்லே பதிச்சுப் பண்ணணும். நடுவுலே பெரிய கருடன். அதன் வயிற்றிலே உட்கார்ந்து கொண்டு யாகம் பண்ணணும். யாகத்துக்கு எல்லாம் ரெடியா யிடுச்சு. ஆசாரியன் உட்கார்ந்துட்டான். யாகத்தைப் பண்றவன் இருக்கிறானே, அவன் கேட்கிறான் . "ஆசாரியரே யாகத்தை ஆரம்பிக்கலாமா? என்று. அப்ப சொல்றான் டேய் இந்த யாகத்தில் வழக்கம் போல ருத்ரனுக்கு அவிஷ். ஒண்ணும் கிடையாது அவன் தொல்லை கொடுப்பான். திருட்டுப் பயல்?... ஆகவே என்ன செய்யறது? - ருத்ரனுக்கு வாக்கரிசி போடணும். என்னடா போடணும்? யாகத்துக்கு என்ன என்ன எல்லாம் கூடாதோ அதையெல்லாம் எடுத்துக்கிட்டான். யாகத்துக்குப் பசும்பால் தவிர வேறு எதுவும் எடுத்துக் கொள்வதில்லை. ஆட்டுப்பால் எடுத்துக்கொள் என்றான். யாகத்துக்கு வேண்டிய பாத்திரம் தூய்மையான செப்பு அல்லது வெள்ளி. அதற்குப் பதில் மட்சட்டி எடுத்துக்கோ என்றான். பசும்பாலுக்குப் பதில் ஆட்டுப்பால்; சுருகரண்டிக்கு எருக்க இலை. சிவபெருமானுக்கு யாகம் பண்றான் ரீருத்ரம் - ஆட்டுப்பால், மண்சட்டி, எருக்க இலை. இதை இடது இறக்கையில் உட்கார்ந்து ருத்ரம்