பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 41 சொல்லி பண்ணுடா என்று சொல்கிறான் அவ்வளவு கேவலமாகச் சிவபெருமானைப் பண்ணுவதுதான் பூரீருத்ரம். இது தோண்டத் தோண்டத் தோண்டிக்கிட்டே இருக்கிறேன். எப்படித் தீர்க்கலாம் என்று... சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறார் சிவராமன் என்னமாடா ஆச்சு? தெரியலை. இந்த மாதிரி வாழ்க்கையிலே நடக்கிறது... உங்கள் கண்களைத் திறந்து வைத்திருங்கள். தொடுதல் உங்களை அறியாமலேயே நடந்து கொண் டிருக்க வேண்டும். புறத்தே நிகழ வேண்டும் என்ப தில்லை. உட்கார்ந்துகிட்டே கூட இருக்கலாம். அந்த எண்ணம் இருக்குமேயானால், ஊறும். எப்ப ஊறும்? இப்ப தண்ணிர் வரும் என்று நினைப்பீங்க. வராது. இன்னும் ஐந்து ஆறு அடி தோண்டனும்னு நினைப் பான். அரை அடி தோண்டும் போது புது புது என்று தண்ணீர் வரும். அவனுடைய ராசி. தொட்டனைத்துறும். ஊறும் என்பது நம்ம செயல் இல்லை; இறைவன் செயல். தொடுதல் நம்முடைய கடமை. அந்த மாதிரி செய்தால் எதை எடுத்தாலும் உங்களுக்கு விடை கிடைக்கும். இப்போ சான்றோர் கவி... ஒவ்வொரு பாட்டையும் அந்த ஆசலம் புரி கேட்டுக் கொண்டே இருக்கணும். கேட்காமல் விட்டால் ஒன்றும் கிடைக்காது. அதுக்கு நாம் என்ன பண்ண முடியும்? கேட்பது நம்முடைய முயற்சி. கேள்வி கேட்பதை விடுவோமேயானால் விடை கிடைக்காது.