பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தொட்டனைத்துறும் மணற்கேணி சாதாரணமாக ஒரு குறள் இருக்கிறது. அந்தக் குறளையே தொட்டனைத்துறும் பண்ணியாகணும். அதைக் குழந்தை நிலையிலே படிக்கிறது போக, மேல் நிலைக்கு வர வர ஆழ்ந்து பார்க்க வேண்டும். - ஒரு காலத்துக்கேற்ற குறள். என் வீட்டுக்காரி கடைக்குப் போனா. அவன் சங்கிலியும் வச்சுருக்கான். வளையலும் வச்சுருக்கான். எதை வாங்குவது என்று அவளுக்கே புரியலை. 'சங்கிலி வேணுனா செக் கொடுங்க. வளையல் வேணுனா கேஷ் ஆகக் கொடுங்க” என்றான். காஷ் விவகாரம் என்றால் கணக்கிலே வராதுன்னு அர்த்தம். நாம் எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கோம். இது எல்லா இடத்திலும் நடக்கிறது. வள்ளுவன் காலத்தில் இந்த ப்ளாக், ஒயிட் இல்லையா இருந்திருக்கு. சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் பசுமட் கலத்துள் நீர்பெய் திரீஇ யற்று - (குறள்-660) எங்கே போறான் பாருங்க. இன்னைக்கு எல்லாத் தையும் பார்த்து, பார்க்க வேண்டியவங்களை யெல்லாம் பார்த்து, செய்ய வேண்டியவையெல்லாம் செய்தாச்சு - இனிமேல் எனக்கு எந்த விதமான பயமும் கிடையாது என்கிறான். சலத்தால் பொருள் செய்து - தப்புத் தண்டா வழியில் பொருளைச் சேகரித்து' என்றான். அதற்கும் மேலே போறான் பாருங்க. ஏன் என்றால் நமக்கு நல்ல அறிவுரை கூற வந்தவன். ஏமம் ஆர்த்தல் பாதுகாவலைச்