பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 43 செய்து விட்டு. இது மாதிரி வந்தால் எத்தனைபேர் கண்குத்தி பாம்புபோல இருப்பான் இதை வெளிக்காட்டு வதற்கு! அவர்களையெல்லாம் வாயடைப்பதற்குப் போட்டு அடக்கி, இனிமேல் ஒரு கவலையுமில்லை என்று இருக்கிறபோது... திடீரென்று போய்விடுகிறது. அதற்கு ஒர் உதாரணம் சொன்னான். 'பசுமட் கலத்துள்நீர் பெய் திரீஇ யற்று பச்சை மண்ணுப் பானையிலே தண்ணிர் வச்சு காபந்து பண்ணி னதுபோல. இந்த உதாரணம் இருக்கிறது. பார்த்தா. பைத்தியக்கார உதாரணம். பச்ச மண் பானையிலே தண்ணி வையுங்க. ஒண்ணும் ஆகாது. அப்ப, வள்ளுவன் தப்புப் பண்ணிட்டானா? இல்லே அவன் என்ன சொல்ல ணும்னு நினைச்சானோ அதை இங்கே சொல்லி வச்சுக் காட்டிவிட்டான். ஏன்னா, பச்ச மண்ணுப் பானையிலே நீங்க தண்ணி ஊத்தின உடனே ஒண்ணும் ஆகாது. ஊத்தி ஒரு மணி கழித்து பாருங்க ஒண்ணும் ஆகாது. இனி கவலையில்லேன்னு போய்ப் படுப்பீங்க - டப் டப் க்ளோஸ். அதுதான் முக்கியம். ஏமம் ஆர்த்தல் தப்புத் தண்டா பண்ணிப் பொரு ளைச் சேர்த்து அதுக்குப் பாதுகாப்பு எல்லாம் செய்து விட்டு அமைதியோடு இருக்கிறியே, பசுமட் கண் கலத்துள் நீர் பெய்து ஒரு மணி பார்த்திரு. உடையாது. இனிமேல் கவலையில்லேன்னு கண்ணை மூடு. அது எப்போ உடைந்ததுன்னு உனக்குத் தெரியாது. அது மாதிரி ஏமம் ஆர்த்தால் எந்த மாதிரி தொல்லை வரும்?