பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தொட்டனைத்துறும் மணற்கேணி ஒன்று அரசாங்கத்தாலே இல்லே வருமான வரித்துறை மூலமாக... தோண்டத் தோண்டப் புதிய பொருள் கிடைக்கிறது. அன்றைக்கு அவன் காலத்தில் என்ன சூழ்நிலையில் அவன் எதை நினைந்து பாடினானோ இருபது நூற்றாண்டுக்கும் இருபத்திரண்டாம் நூற்றாண்டுக்கும் அது பொருந்திவருகிறது. பொதுமைகள் அது மாதிரி! உழவைப் பற்றிப் பேசுவான். வெங்கட்ராமன் துறை வெங்கட்ராமன் ஏரையும் பார்த்தவர். டிராக்டரையும் பார்த்தவர். இத்தனைக்கும் பொதுவாகச் சொல்வானா வள்ளுவன்? "சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்றான். மற்றதெல்லாம் கருவி என்று சொல்லிவிட்டால் ஏருக்கும் பொருந்தும், டிராக்டருக்கும் பொருந்தும். இது மாதிரி பொதுமையாகச் சொல்கிறான் உலகம் எவ்வளவுதான் வளர்ச்சி அடைந்தாலும் அந்தக் குறள் பொருந்தும். ஒரு சம்பவம். துணை வேந்தர் தெ.பொ. மீயும் நானும் உட்கார்ந்து பேசிக் கொண்டே இருந்தோம். அப்போது எங்ககிட்ட படித்த பெண் ஒருவர் - கோவை கிருஷ்ணம்மாள் காலேஜில் வேலைபார்ப்பவர் - வந்தார். 'வாம்மா, வணக்கம், செளக்கியமா? என்றார் தெ.பொ.மீ. அந்தப் பெண் ஒரு ஏழைப் பெண் - படித்து முன்னுக்கு வந்தவள் - நன்றாக வசதியாகவே இருக்கிறேன் என்றாள். என்னம்மா, ஏதோ கேள்விப் பட்டேனே? - ஆமாம், சார் இரண்டு மூன்று ஆண்டு காலமாக 20 லட்ச