பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 45 ரூபாயில் படுத்திருந்தேன் என்றாள். தெ.பொ.மீ. அதிர்ந்து போனார். ஆமாம் லார், ஹாஸ்டல்லே வருமான வரிச் சோதனை நடந்தது. பெட்டுக்குள்ளேயிருந்து பொல பொல வென்று ரூபாய் கொட்டுது. என்னுடைய படுக்கையில் இருந்து 20 லட்சம் ரூபாய் கொட்டிற்று' என்றாள். மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற. (குறள் - 14) எந்த ஒரு பயலும் மனசைப் பற்றிச் சொல்லலை. ஆகமமோ, வேதமோ, வாழ்க்கை முறையைப் பேசும் தர்ம சாஸ்திரமோ, எதுவும் மனத்தைப் பற்றிச் சொன்னதே கிடையாது. வேத பாடசாலையிலே முதல்வராக இருப்பவர் - நாலு வேதத்திலும் கெட்டிக்காரர். அவர் தலைமை வகிச்சார். 'ஸார் நான் சொல்றது உங்களுக்குப் பிடிக்கலேன்னா நீங்கள் சொல்லுங்க பஞ்சாட்சரம் ஒன்னு இருக்கு. அது ஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் எல்லாம் அவ்வளவு மொழி படிச்சவங்க. பாலி கூட படிச்சிருக் காங்க. திருநாவுக்கரசர் பலமொழி அறிந்தவர். ஆனால் ஒரு தடவை கூட பஞ்சாட்சரம்' என்கிற சொல்லைப் பயன்படுத்தவே இல்லை. ஐந்தெழுத்தைப் பற்றித்தான் சொல்கிறார்கள். ஆகவே நீங்க ருத்ரத்தில் வர பஞ்சாட்சரம் வேறே, ஐந்தெழுத்து வேறே' என்றேன். அவர் வாயைத் திறந்து பேசலை. இரண்டும் 'நமசிவாய' தான். இல்லன்னலே, கொல்' என்று தமிழிலே ஒரு வார்த்தை இருக்கிறது; kill' என்று ஆங்கிலத்திலே இருக்கு. இரண்டும் ஒரே அர்த்தம். இதிலேயிருந்து அது வந்ததா: