பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தொட்டனைத்துறும் மணற்கேணி அதுலேயிருந்து இது வந்ததா? மொழிநூல் படிச்சவர் களுக்குத் தெரியும். மொழிகளில், ஒத்த ஒலியோடு ஒத்த பொருளோடு சொற்கள் தனித் தனியே இருக்கலாம். இது இரண்டும் ஒன்று என்று எப்படிச் சொல்வது? மேலும் விளக்கம் கேட்டார். உதாரணம் சொன்னேன். யாகத்தில் வர மந்திரங்கள் பார்த்தீங்களானால், முன்னால் மந்திர போகி என்று இருக்கும். அதிலே, இந்திராய ஸ்வாஹா, வருணாய ஸ்வாஹா என்று போட்டுக்கிட்டே இருப் பான். ஆனால் இப்படி போடறவன் எந்த மனோ நிலை யில் இருக்கணும்னு வேதத்திலே எங்கேயும் சொல்லலை. மேற்கு நோக்கி உட்காரனும், ஒன்றரை அடி பலகை போடணும். இதை எடுத்து விடணும். அப்படீன்னு சொல்லியிருக்கே தவிர அப்படிப் போடறவன் சீட்டாட் டத்தைப் பற்றி நினைச்சிக்கிட்டே இருந்தான்னா? ஆகவே நான் சொன்னேன் ஐயா, உங்கள் பூரீருத்ரம் சொல்றவன் எந்த மனோநிலையிலே சொல்லனும்னு சொல்லலை. ஆனால் எங்க ஆள் அப்படிச் சொல்லலை. என்னைப் போல காலிப் பயிலே இருந்தான்னா 'நமச்சிவாய' என்று தினமும் கத்துறான் - மோட்சத்துக்காப் போவான் அவன்? பூரீருத்ரக் கணக்குப்படி நீ 100 தடவை சொன் னால் அதற்குப் பயன் உண்டு. திருவள்ளுவர் கருத்து ஒரு கோடி தடவை சொன்னாலும் புண்ணியம் கிடையாது. ஒரு கோடி சொன்னாலும் பயனில்லை. ஏன் இங்கே மனநிலை தான் முக்கியம். . காதலாகிக் கசிந்து கண்ணி மல்கி ஒதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது - r - (திருமுறை:3:49:1)