பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 47 இத்தனை முன்னேற்பாடு இருந்தால்தான் நீ சொல்கிற நமச்சிவாயத்துக்கு மதிப்பு. இல்லாவிட்டால் வெற்று ஒசைக் கூட்டம்தான். ந-ம-சி-வா-ய ஒலிக்குப் பலனுண்டு. எதுவாக இருந்தாலும் தோண்டத் தோண்ட கவிதை யாகட்டும், தத்துவமாகட்டும் ஆன்மீகமாகட்டும். ஊறும். ஒலி அலைகளுக்குப் பலன் உண்டு இல்லேன்னு சொல்லலை. நான் ஒலியைப் பற்றிப் படிச்சிருக்கிறேன். Ultra soundஐப் பற்றிப் படிச்சிருக்கிறேன். Supersonic Soundஐப் பற்றி நம்மவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதுக்கும் பலனுண்டு. அதனாலே அத்யாயனம் பண்ண னும்னு. இப்ப இந்த vibrations இருக்கே, ஏன் மந்திரங் களிலே சேர்த்தான்? (நமசிவாயங்கறது கூட அதைச் சமீபத்திலேதான் வந்த சிந்தனையை எழுதினேன்.) இதுவும் தோண்டினதனாலே வந்த பொருள் தான். யாரோ ஒருத்தர் கேட்டார். 'என்ன ஸார், மந்திரம் மந்திரம்னு? சரி. நமசிவாய என்றால் என்ன? தொடக் கப்பள்ளி பையனுக்குக் கூடத் தெரியும். நம என்றால் கும்பிடு என்று அர்த்தம் சிவ - சிவபெருமானுடைய பெயர். இதை இரண்டையும் சேர்த்தா எப்படி மந்திரமாயிடும்? அப்பொழுது தொல்காப்பியம் நினைவுக்கு வருது. அதிலே சொல்லியிருக்கிறான். நாமெல்லாம் குறை