பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 தொட்டனைத்துறும் மணற்கேணி பின்னே யாருடான்னா? மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய காலமும், கணக்கும், நீத்த காரணன் கைவில் ஏந்திச் சூலமும், திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான் (கம்ப.சுந்தர. பிணிவீட்டு - 80) இது ஒரு பாட்டு. இதற்கு 16 பக்கம் பொருள் எழுதி யிருக்கிறேன். காரணம், கொஞ்சம் சயின்ஸ் படிச்சதி னாலே. இப்ப இந்தப் பாட்டு இருக்கிறதே, இதில் நான் மட்டும் தானா? பாரதி ஈடுபடுகிறான். 'எல்லையொன் றின்மை' எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதி யும்.” என்பது பாரதி வாக்கு. அப்போ எல்லை ஒன்றின்மை எனும் பொருள் என்றால் என்ன அர்த்தம்? எல்லை கட்டிவிட்டால் அது கடவுள் இல்லை என்றாகி விடும். கம்பன் என்ன பண்ணுவான் பாவம். குறிகளால் காட்டிட முயல்கிறான். எண்ணலியைக் (Infinity) கொண்டு கணக்குப் போட முயலுகிறீர்களே. அதுபோலக் குறிகளால் காட்டி விட்டான் என்றால் கடவுள் அடிபட்டுப் போகும். கடத்தல் என்ற சொல் அடிபட்டுப் போகும். ஆகவே எவ்வளவு ஜாக்கிரதை யாகச் சொல்றான் பாருங்கள். கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும் என்கிறான். எனினும் அவன் முயற்சி செய்கிறான்.