பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 59 தரும தேவதை பின்னாலே இரங்கிப் போச்சு என்று சொல்லி விட்டால், இராமன் வனவாசம் பயனற்றதாகப் போய்விடும். தருமம் என்பது அரச தருமம் என்று பொருள்படும். அதுதான் இக்காலத் தர்க்கவியல் கொள்கை. மூத்தவன் பட்டத்துக்கு வர வேண்டுமென்ற அரசதர்மம், அது இங்கே நடக்கலே. அது அடிபட்டது. மூத்தவன்தான் அரசாளனும் என்கிற அரச தருமம் அடிபட்டுப் போய் விட்டது. ஆக, தோண்டினால் ஆழமான பொருள் கிடைக்கும். மனித ஆற்றலுக்கு ஒர் எல்லை உண்டு. They Cross all barriers. . அனுமன் இருக்கான்; அவன் இராமன் யார் என்று யார்கிட்டே போய்ச் சொல்வது? எல்லாம் எருமைகள்; எதனிடம் சொன்னாலும் எடுபடாது. பேசாமல் உட்கார்ந் திருந்தான். சுக்ரீவன்கிட்டே சொன்னா ஏறுமா, அவன் மண்டையிலே? அவனுக்கு வேண்டியது அண்ணனை அடிக்க ஆளு. கடைசியாய்ப் பார்த்தான், இராவணன் அறிவாளின்னு தெரிந்து கொண்டான். "அவன் அனுமனிடம் நீ யாருன்னு? கேட்டான். நீ சொன்னயே, 'தேவனோ, அவனோ, மூவரோ என்றெல்லாம். 'நீ சொன்ன அப்புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலேன்' என்று சொன்னான். 'பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என்று சொன்னியே. அவங்க ஆளு இல்லே நான். அவர்கள் மூன்றாந்தரமானவர்கள். அவங்களுக்குப் பணி செய்பவன் அல்லன் யான்.