பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தொட்டனைத்துறும் மணற்கேணி பிடித்துக்கிட்டு வருவான் - எல்லாம் முன்னே பார்த்திருக் காங்க. இவன் பேசாம நடந்து வந்தான். இரண்டும் இல்லே. எல்லாருக்கும் தெரிகிறது. இரண்டு இருக்கு. அது யாருக்கும் தெரியலே. அது தான் விதி. இழைக்கின்ற விதி முன்செல்ல அது இராமனைப் பின்னிக்கிட்டே போகுது. ஏனென்றால், இராமனை இங்கு வரவழைத் ததே ஒரு குறிபிட்ட நோக்கத்திற்காகத்தான். ராஜ்யம் பதினாயிரம் வருஷம் பண்றத்துக்கா இராமன் வந்தான்! பெரிய ஒரு காரியத்தை நிறைவேற்றுவதற்கு விதி அவனைக் கூட்டி வந்தது - இழைக்கின்ற விதி. அது இவனுக்கு முன்னாலே இவனை இழுத்துக்கிட்டுப் போகிறது. காட்டுக்குப் போகணும். பொண்டாட்டியை அரக்கன் தூக்கிண்டு போகணும்... பின்னலே என்ன? தருமம் பின் இரங்கி ஏக இராமனுக்குப் பின்னாலே தருமம் வருந்திப் போகிறது. தருமம் என்றால் இங்கே என்ன பொருள்? தருமம் பின் இரங்கி ஏக / மழைக்குன்றம் அனையான் மெளலி கவித்தனன் வரும் என்று என்று.... அம்மா காத்திண்டிருந்தாளாம். பட்டம் ஏற்பதற்கு முன்னர் மஞ்சள் நீராடி வருவான்னு பாத்தாளாம். ஆனால் இராமன் இப்போ குளிக்காமல் வந்துட்டான். இழைக்கின்ற விதி முன்னாலே போச்சு. தருமம் பின் இரங்கி ஏக என்றால் என்ன அர்த்தம்? தரும தேவதை பின்னே வருந்திச் செல்ல எனப் பொருள் சொல்லலாம். அது சரியா? தோண்டிப் பார்க்கணும்.