பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 57 கவலையில்லை என் பணி செய்வேன் என்று சொல்லி வாழ்பவனும் உண்டு. இரண்டு பேரும் மனுஷன் தானே. இதுதான் மனிதர்களுக்குள் வேறுபாடு. ஆறு மாதம் என்று சொன்னதிலே ஒரு நன்மை உண்டு. இரண்டு வருஷம் கழித்துச் செய்யலாம் என்று நினைத்ததை யெல்லாம் இப்பவே திட்டமிட்டுச் செய்யலாம். இதுவும் ஊழை வென்ற மாதிரி தானே. அது தெரிந்த பிற்பாடு ஆறு மாதத்தில் என்ன செய்ய வேண்டுமென்பதைத் திட்டப்படுத்தி 6 மாதம் போறதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம் கூட விடாமல் செய்பவனிடம் ஊழ் என்ன செய்ய முடியும்? ஆக ஒருமனிதன் அஞ்சவில்லை என்றவுடனே ஊழ் தோத்துப்போகிறது. சிந்தித்துப் பாருங்கள். இராமன் பட்டத்துக்குப் போனான். பட்டம் இல்லை என்றவுடன் திரும்பி வர்றான். கம்பருக்கே கஷ்டமா யிருக்கு. குழைக்கின்ற கவரி இன்றிக் கொற்ற வெண்குடையும் இன்றி இழைக்கின்ற விதி முன் செல்லத் தருமம் பின் இரங்கி ஏக மழைக்குன்றம் அனையான் மெளலி கவித்தனன் வரும் - எனறு எனறு தழைக்கின்ற உள்ளத்து அன்னாள் முன் ஒரு தமியன் சென்றான். (கம்பரா.அயோத். நகர் நீங்கு-1) இராமன் இளவரசன் இல்லையா? இரண்டு பக்கம் கவரி வீசி வருவார்கள் பெண்கள். குடையைப் பின்னாலே