பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தொட்டனைத்துறும் மணற்கேணி கிறவா உலகத்திலே ரொம்பப் பேர் இருக்கா. ஆகவே ஒன்றுமே பண்ண வேண்டாமா? ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் (குறள் 620) விதியைப் புறமுதுகு காணலாம். 'புறமுதுகு காண லாம் என்று எழுதினார்கள். புறமுதுகிடுதல் என்றால் என்ன அர்த்தம் இவர் எதிர்த்தாற்போல வருகிறார். எதிர்த்தாப்பலே வரும்போது அவர் என் எதிரி; என்னை அடிக்கணும்னு வர்றார். இவர் திரும்பிட்டார் என்றால், என்ன அர்த்தம். தொல்லை ஒன்றுமில்லை. அது ரொம்ப சிந்திச்சுப் பாக்கணும். எதிரே வருகிறான். என்ன காரணத் தாலோ திரும்பிப் போறான். திரும்பிப் போனதால் எனக்கு ஒன்றுமில்லை. வந்தது என்னமோ உண்மை. வந்தது இல்லேன்னு சொல்ல முடியாதே. ஊழையும் உப்பக்கம் என்றதனாலே முற்பக்கம் பெறப் பெறுகிறது. எதிரேதான் வருகிறது. அது ஒழிக்க வருகிறது. நான் கவலைப்படவில்லை. என் பணியைச் செய்வேன். இப்போ இந்த நாட்டிலே வெளிப்படையாகச் சொல் pitää. 'You have got to live six months more here.' அவனும் ஆறுமாதத்தில் செய்ய வேண்டியவற்றைச் சிறந்த முறையில் செய்வேன் என்று நினைக்கிறானே அவன் ஊழையும் உப்பக்கம் கண்டவன். நம்ம ஊரிலே 6 வருஷம் இருக்கு என்று சொன்னவுடன், ஆறு வருஷமும் வயிற்றிலடித்துக் கொண்டு வருந்திச் சாவதும் உண்டு. இங்கு 6 மாதம் உண்டு என்று கேட்டவுடன்,