பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச, ஞானசம்பந்தன் 55 அதுபோல ஊழைப்பற்றிச் சொல்லும்போது - 'பெருவலி யாவுள' நீ எந்த வழியிலே போயேன். அந்த வழியாலேயே வரும் அது அவங்க அவங்க வாழ்க்கையில் பார்க்கலாம். நம்பவே முடியாது. நீ எப்படித் தடுக்கப் பார்த்தாலும், அந்தத் தடுக்கிற முயற்சி வழியாகவே வரும்.' பாரதத்திலே... பரீட்சித்து மகாராஜா கதையை சொல்வான், பரீட்சித்து பாம்பு கடிச்சுச் செத்துப் போவான்னு சாபம். கடலிலே ஒரு அரண்மனையைச் செய்து சமுத் திரத்துக்கு நடுவிலேயே பாம்பே வராதபடி இருந்தான். உரிய நாள் வந்தது. அப்போது ஒரு எலுமிச்சம்பழம் கடலில் மிதந்து கொண்டே வந்தது. அதைப் பார்த்த காவல்காரன் ராஜா, ஒரு எலுமிச்சம் பழம் மிதக்கிறது’ என்றான். ராஜா அது எப்படி எலுமிச்சம் பழம் வரும். கொண்டாடா பார்க்கலாம்' என்றான். கொண்டு வந்தார்கள். அதை முகர்ந்து பார்த்தான் - கடித்தது - அது பாமபு. ஆக நடைபெற வேண்டுமென்றால் மற்றொன்று சூழினும் தான் முந்துறும். எந்த வழியாக நீ பண்ணுகிறாயோ அது வழியா வரும். இதைத் தெரிந்துகொண்டு நடக்கிறதில் ஒரு நன்மை உண்டு. தெரிந்துகொண்ட பிற்பாடு என்ன ஆகிறது? நீ ஒரு காரியம் ஆரம்பித்து வெற்றிபெறவில்லை என்றால், தற்கொலை பண்ணிக்கிடுவே. அப்படிப் பண்ணிக்