பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தொட்டனைத்துறும் மணற்கேணி தோண்டத் தொடங்கினால் அது எந்த வழியில் வேண்டுமானாலும் வெளிப்படும். விஞ்ஞானமாகவோ, மந்திரமாகவோ, கவிதையாகவோ தொழில் முறையிலோ வெளிப்படும். எப்படி வெளிப்படும்? - நீங்க எந்த அள வுக்குத் தோண்டுகிறீர்களோ அந்த அளவுக்கு வெளிப் படும். அப்படின்னா, மூளையிலிருக்கிற அந்தஸ்து அது. அடுத்து விதியை எடுத்துக் கொள்வோம். விதியை வெல்ல முடியாது என்பாங்க. ஊழின் பெருவலி யாவுள மற்றுஒன்று சூழினும் தான் முந்துறும் (குறள் - 380) இப்படி ஒன்றுக்கொன்று மாறுபட்டுச் சொல்லப் படுவதற்கு அறுதியாக ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் ஒன்று மட்டும் சொல்லலாம். வள்ளுவர் பைத்தியக்காரர் இல்லே ஒரளவுக்கு எந்தக் கருத்தை எடுத்துச் சொல்ல வேண்டுமோ அதை அழுத்திச் சொல்வார். இது எல்லா ருக்கும் உள்ளது. சீதை அழகு என்று சொல்வான் கம்பன்; மண்டோதரியை வருணிக்கும் போது, சீதை கெட்டாள் - மறந்து விடாதீர்கள். அப்போ மண்டோதரியை வருணிக் கும்போது சீதையை மறந்து விட்டானா? இல்லே அந்தந்த இடத்திலே அந்த அந்தப் பொருளுக்கு பிரதான்யம் கொடுக்கணும். அது தான் முக்கியம். இந்த இடத்தில் சீதைக்கு அடுத்தபடி என்று சொன்னால் கதையே போயிடும்.