பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 53 அடியில் இருக்கிறது என்ன என்று சொல்வது தொல்காப்பியத்தில் சொல்வான் - எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே எல்லாச் சொல்லுக்கும் பொருள் இருக்கிறது. சொல்லுக்குப் பொருள் என்பது நம்ம நிலையிலே ஒரு பொருள் - மேலே போகப் போக ஒத்த கருத்துக்களின் இணைப்பு மூலமாக அதற்கேற்ற ஒரு பொருள் தெரியணும். I.A. Richards இதை நன்கு விளக்கிறான். துப்பாக்கி இருக்கிறது; வாள் இருக்கிறது - இரண்டும் கொலைக் கருவிதான். take the sword என்கிற போது take the gun என்று சொன்னால், அதுக்கு அர்த்தம் வேறே. ஏண்டான்னா இரண்டாயிரம் வருஷமா, 'Sword என்பது Homer காலத்திலேயிருந்த நம்ம காதிலே விழுது. அதனால் 'SWord காதிலே விழுந்தவுடனே, Homer கருத்து என்னவோ அது குத்தினால் என்ன ஆகும் என்பது நமக்கு கண்முன் வருது. - அதுவரையில் நம்முடைய கற்பனை வருது - SWord என்றவுடன், நியூரான்கள் சேமித்து வைத்திருப்பதில் இத்தனை அளவுக்குச் சேர்ந்து வருது. அந்த 'Sword நாடகத்திலே வரும்போது, அந்த இடத்தோடு பொருள் பண்ணுது. இது தான் தொட்டனைத்துறும். Sword என்று வந்த வுடன், நாம் ஒருநாள் அந்த நாடகத்திலே பார்த்த அட்டைக்கத்தி நினைப்பு வருது. ஆகையினாலே மணற் கேணி போல மூளையில் உள்ளன. நியூரான்கள். மணற்கேணி போல இருப்பது மூளையிலே உள்ள ந்யூரான் கூட்டம். தொடுதல் ஆகிய செயல் நம்மைச் சேர்ந்தது.