பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தொட்டனைத்துறும் மணற்கேணி மந்திரத்தைச் சொல்லியிருப்பார்! குரு சொன்னான் 'சொல்லிட்டுப்போ. நீ நரகத்திற்குப் போவே'. 'நான் போகத் தயார் என்று சொல்லிட்டார் இராமானுஜர். இந்த அளவுக்கு பிறருக்குச் செய்ய வேண்டுமென்ற பெருங்கருணை அளவில் உந்தப்பட்ட பெரியவர்கள் தோண்டுகிறார்கள் எப்படி மக்களுக்குத் தொண்டு செய்வது என்று! ஆண்டவன் அதற்குத் தகுந்தபடி வழி காட்டுகிறான். கலைஞன் நினைக்கிறான். ஒரு சிறந்த கவிதை இயற்றி, உலகுய்வதற்கு வழி செய்ய வேண்டுமென்று. விஞ்ஞானி நினைக்கிறான் புதிய கண்டு பிடிப்புகளைப் படைத்து சமுதாயத்திற்குக் கொடுக்க வேண்டுமென்று. இத்தனை பேருக்கும் தோண்டுவது பொதுப்பண்பு. ஒரே காரியம் விஞ்ஞானிக்கும், விவசாயிக்கும், புலவனுக்கும் சேருமா? சேரும். ஒரு வேரிலிருந்து சத்து வருவது ஒண்ணு தானே? தண்டுக்குப் போவுது - தண்டு உருவாகுது. இலைக்குப் போகுது. இலை தழைக்குது. பூவுக்குப் போனா பூ பூக்குது, அதுபோலத்தான். இலக் கியத்திலே தோண்டலாம்; இலக்கணத்திலே தோண்ட லாம்; ஆன்மீகத்திலே தோண்டலாம். எதிலே வேண்டு மானாலும் தோண்டலாம். தோண்டினால் ஊறும். இத்தனையும் மனசில் வைத்துக்கொண்டு, அறிவு என்று சொல்லினால் விளக்கம் பெற வேண்டும்னு நினைக் கிறயா, அதனால் பெறுவாய். உணர்வு விளக்கம் பெற வேண்டும் என்று நினைக்கிறயா? அதனைப் பெறுவாய். இது இரண்டையும் தாண்டி இதனுடைய சொல்லுக்கு