பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 51 o sirGoT LIGËĝisorTTGITTGb, you will feel Bakti - @gi பாடல் பெற்ற ஸ்தலம், மங்களாசாஸனம் பெற்ற ஸ்தலம் - என்று. இந்த நிறைமொழி மாந்தர்கள் அந்த இடத்திலே போய் அந்த power-ஐ வைத்திருக்கிறார்கள். இதை எப்படித் தெரிந்துக்கிறோம்? தோண்ட வேண்டும். தோண்டினால் அதற்குப் பொருள் வைத்திருக்கிறார்கள். நச்சினார்க்கினியர் முதல் எல்லாரும் சூத்திரத்துக்கு உரை எழுதி வைச்சிருக்காங்க. 'நிறை மொழி மாந்தர் - முற்றறிவுடையவரான மாந்தர்; ஆணையிற் கிளந்து - ஆணையினால் மொழிந்து. மறைமொழி - மறைமொழி, - மந்திரம் - மந்திரம்' என்று. நீங்கள் ஏன் என்று தோண்ட ஆரம்பிச்சீங்கள்னா எதை எடுத்தாலும் தோண்டத் தோண்ட, கவிதையாகட்டும், தத்துவ மாகட்டும், ஆன்மீக விஷயமாகட்டும், ஆண்டவன் நிச்சய அருள்கிட்டும். வைணவத்தில் இராமானுஜர் இருந்தார். நமோ நாராயணாய என்று வாத்தியார் சொல்லிக் கொடுத்ததைக் கோயில் கோபுரத்தில் மேலே ஏறிக் கத்தினார். கீழே இருந்த குரு கத்தினார். 'டேய் சண்டாளா. மூன்று நரகத்தையும் தாண்டி அழிந்து போவே' 'நீ என்னா சொன்னே இந்த மந்திரத்தைத் தினமும் சொன்னா, மோட்சம் போவான் என்று சொன்னியா இல்லையா?” ஆம். இத்தனை பேரும் மோட்சம் போக, நான் மட்டும் நரகம் போனால் போகிறேன்' என்றார். அந்த மாதிரி கதவைத் திறந்த நாடு இது. இராமானுஜர் என்ன தைரியம் இருந்தால், குருவினுடைய வார்த்தையை அவன் காலத்திலேயே மீறிக் கோபுரத்தின் மேலேறி