பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 தொட்டனைத்துறும் மணற்கேணி இந்தப் பாட்டில் ஈடுபட்டுத்தான் பாரதி எல்லை யொன்றின்மை எனும் பொருளதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சி என்று குறித்தான். பாரதிக்கு அப்புறம் நாம யாரும் சிந்தனை பண்ணலை; தோண்டலை. இந்தப் பாட்டு எல்லாப் பாட்டோடு ஒரு பாட்டாகப் போயிடும். இந்த ஒரு பாட்டிலே உலகத்தில் உள்ள எல்லாப் புலவர்களையும் மிஞ்சுகிறான் கம்பன். இந்த ஒரு பாட்டு பாடியதினால் அவனை விஞ்ஞானி என்று சொல்வதா? அணு பெளதீகம் படிச்சவன் என்று சொல்வதா? கைவழி நயனம் செல்ல என்று பாடியதால் நாட்டிய சாஸ்திரம் வல்லவன் என்று சொல்வதா? எங்கிருந்து வருகுது - நினைச்சுப் பாருங்க நம்ம ஊரில் பிறந்தவன் ஒருத்தன் சடையப்பன் போட்ட சோற்றைச் சாப்பிட்டு - பூகோளமே தெரியாத ஒருவன் - நல்லா தெரியது. நாட விட்ட படலத்திலே பார்த்தா விளங்கும். நடுவில் என்ன நாடு என்பது தெரியவில்லை - இது கம்பன்லே பெரிய குறைபாடு தான். புகுந்து விளையாட றான் அவன் பாட்டுக்கு - இவை எல்லாம் சிறிய குறை பாடுகள். இது கூடத் தெரியாதவன் இந்த ஆழத்துக்குப் போறான்னா. என்ன சொல்றது? சித்தர் ஒருத்தர் இருந்தார். கிணற்றிலே ஏற்று போட் டிருக்கய்யா. அதைச் சமுத்திரத்திலே ஏற்று போட்டுக்கோ என்றார். கிணற்றிலிருந்து கொஞ்சம் தான் இறைக்கலாம் - சமுத்திரத்திலிருந்துனா? கவலையே இல்லை. கம்பன் சமுத்திரத்தில் ஏற்று போட்டிருந்தானா? என்ன என்று சொல்வது? நம்மைப் போல் மனுஷன் என்பதா?