பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தொட்டனைத்துறும் மணற்கேணி 'அட கிருஷ்ண நம்பூதிரியே தவறு செய்து விட்டாரே...' என தவிப்பு. 6 மாதம் கழித்துப் பெண்ணின் தந்தை - அதே செத்துப்போனவன் ஜாதகத்தையும், தன் பெண் ஜாதகத்தையும் எடுத்துக்கிட்டு வரிசையிலே நின்றாராம். இவரு கதவைத் திறந்தாராம். அழுதாராம். திறந்தவுடன்..... 'ஏண்டா பாவி - அந்தப் பெண்ணை விதவை ஆக்கணும்னு நீ முடிவு பண்ணிட்டாயானால், என்னை ஏண்டா பொறுப் பாக்கினே அப்படீன்னு கிருஷ்ணரைத் திட்டினார். ‘என்னைச் சொல்லிப் புண்ணியம் இல்லை. அவன் அப்படி நினைச்சு, என்னைக் கைதியாக்கி விட்டான்." இப்ப - இதைச் செய்யக் கூடியவனுக்குக் கூட அந்த நேரம் வந்தால் அதைத் தடுத்திடும். - உண்மை அறிவு என்று சொன்னது உண்மையான அறிவு அல்ல. உள்ளே இருக்கின்ற அறிவு. இவனுடைய பல பிறப்புகள்தோறும் வந்து, என்ன செய்யணும்னு இருக்கல்லவா? அதுக்கு ஏற்ற அறிவு; அவ்வளவுதான் சொல்லலாம். - கேள்வி: அறிவும், பண்பும் ஒரே பொருளாய் வருகின்றனவா?, உணர்வு என்றும் சொல்லலாம். தவறு இல்லே. பாரதி கூடச் சொன்னாரே பலகற்றும் பல கேட்டும் பயனொன்றும் இல்லையடி பதில்: மனம் வெளுக்க' என்று சொன்னதனாலேயே உணர்வைத்தான் சொல்கிறான் அவன்.