பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 73 பிறத்தியாருக்காக வலிமையான முயற்சி செய்வார் களேயானால் வெற்றி. காந்திஜி சொன்னார். அந்தராத்மா - போனால் போகுது - என்னுடைய கடமையைச் செய்கிறேன். தன்னலத்திற்கு என்று வரும்போது தன் உண்மை அறிவே மிகும். 'எவ்வளவோ பேர் எடுத்துச் சொல் வாங்க ஒன்றும் பண்ணுவதற்கில்லை. எத்தனையோ உதாரணம் சொல்லலாம். பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் - குருவாயூர் - அங்கே கிருஷ்ண நம்பூத்ரி ரொம்பப் பெரியவர். அதாவது திருக்கச்சி நம்பி மாதிரி ஆண்டவனோடு நேரே பேசுவார்னு சொல்லுவாங்க. நமக்குத் தெரியாது. அவர் வந்து கதவை மூடிவிடுவாராம். அப்புறம் கொஞ்சம் நாழி கழிச்சு திறப்பாங்களாம். வரிசையாக நிற்பாங்களாம். இடது கையிலே பெண் ஜாதகத்தை வச்சுகிட்டு, வலது கையிலே ஆண் ஜாதகத்தை வச்சுகிட்டுக் கண்ணை மூடி நிற்பாங்க. கையை இரண்டு ஜாகத்திலே வச்சார்னா கல்யாணம் பண்ணலாம்னு நம்பிக்கை குட்டி ராஜாக்கள் கேரளத்தில் நிறைய பேர் த்ரிபுவன சக்ரவர்த்தி என்று சொல்லிக் கொள்வார். 1/2 கிலோ மீட்டர் முக்கால் கிலோ மீட்டர் நிலப்பரப்பு. அது மாதிரி ஒருத்தன். அரசியல் காரணத்திற்காகத் திருமணம் பண்ணும் படியா ஆயிடுத்து. வந்து நின்னான். இவர் கையை வச்சார். தாலி கட்டினவுடன் பையன் செத்துப் போயிட்டான்.