பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தொட்டனைத்துறும் மணற்கேணி நுண்ணிய நூல் பல கற்பினும் என்றபடியாலே அந்தச் சொல்லிலே அழுத்தம் வைக்கிறார். வெறும் ஏட்டுப்படிப்பாப் படிச்சு பயனில்லை. அதை ஆழமாகப் பயின்றான். ஏற்றுக்கொண்டான். இவ்வளவு வேண்டாம். இராவணனே உதாரணம். ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய் தீயினை நயப்புறுதல் செய்தனை தெரிந்தாய் (கம்ப:யுத்த:மந்திராலோ:48) 'பிறன் மனையை நயத்தல்' பிழை என்பது அவனுக்குத் தெரியாதா? முட்டாளுக்கே தெரியுமே; ஆயிரம் மறைப் பொருள் உணர்ந்து அமைந்தவன் அறியானா? நுண்ணிய நூல் பல கற்பினும் அந்த உண்மை அறிவு ஆக இருக்கே அடக்கமில்லே. போய்ப் பற்றிக்கொண்டு வந்தான். ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் பார்க்கி றோம். நாம் ஒரு காரியத்தைச் செய்யணும்னு நினைக் கிறோம்... ஒன்று வேறுபாடு. இந்தக் காரியத்தைச் செய்யணும்னு நான் சொல்ற போது இரண்டாகப் பிரிக்கணும். பிறர் பொருட்டாகச் செய்யணும்னா வெற்றி. எழுதிக் கொடுக்கிறேன் - அது ஏற்கனவே சொல்லிட்டாங்க. தமக்கென முயலான் நோன்தாள். பிறர்க்கென முயலுநர் உண்மையானே - (புறநானூறு:82)