பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 71 வினா விடை அரங்கம் கேள்வி: நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும் (குறள் 373) என்று எழுதியிருக்கிறார். 'அப்படியானால் நீ என்ன படிச்சாலும், சமயத்திலே உங்களுக்கு இருக்கிற சுய புத்திதான் வரும். சொல் புத்தி வராது என்று சொல்கிறாரா? அல்லது வேறு விதமாய்ச் சொல்கிறாரா?” பதில்: உண்மை அறிவு என்கிறது இயல்பாக அமைந்திருக்கிற ஒன்று. நீதித்துறையில், Natural Justice என்று சொல்கிறார்கள், இல்லையா? அந்த மாதிரி. சில அடிப்படைகள். இந்தப் பிறப்பிலே நமக்கு ஆண்டவ னாலே கொடுக்கப்பட்டது. அப்படி வச்சுக்குங்களேன். இது என்ன ஆகிறது? பல சமயங்களிலே நுண்ணிய நூல் கற்று அதன் வழியிலே போகணும்னு நினைக்கிறான். தன் உண்மை அறிவு ஏமாத்திடும். ஏமாத்திடும்னு சொல்ல வரலே. அது எங்கே இருக்கோ அங்கே கொண்டு போய்விடும். ஒன்று சொன்னா, புரிஞ்சுக்கணும் நீங்கள். தோல் வெளுக்கச் சாம்பலுண்டு எங்கள் முத்துமாரியம்மா துணி வெளுக்க மண்ணுண்டு எங்கள் முத்துமாரியம்மா மனம் வெளுக்க வழியில்லையே எங்கள் முத்துமாரியம்மா. (பாரதியார் கவிதைகள்:தோத்தரப்40)