பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7Ο தொட்டனைத்துறும் மணற்கேணி போயிடுத்து. அது வரையில் புளிய மரத்தடியில் இருந்த நம்மாழ்வார் என்கிற ஆளே மறைந்து விட்டார். ‘என்னை விழுங்கி - விழுங்கின. பிற்பாடு? பாம்பு விழுங்கிடும். அதைப் பார்த்தால் வயிறு பெரிதாக இருக்கும். அது செரிமானம் ஆகிற வரையில் உள்ளே அப்படியே இருக்கும். என்னை விழுங்கினால் அந்த நான் என்பது எங்கேயாவது ஒட்டிக்கிட்டு இருக்கலாமில் Gð) Gi) tu FTP 'தானேயாய்' இந்த நான் என்பது ஒழிந்தது மட்டுமில்லே, அந்த வாசனையே இல்லாமல் பண்ணிவிட்டார். ‘என்னுள் புகுந்து என்னை விழுங்கித் தானேயாய்” அப்போது ஏன் பாடுவித்தான்? ஏன் பாடணும்? இந்தப் பாட்டைப் படிக்கும் போது தோண்ட ஆரம்பித்தேன். அவர் விளக்கம் தந்தார். இறையருள் பெற்ற நம்மாழ்வார் பாடிய பாட்டுத் தான். பிழை இல்லை என்று தோன்றுகிறது. இரண்டாம் ஆள் இல்லையே! அப்படியானால், 'பாடினேன் என்று தானே சொல்ல வேண்டும். தான் பாடிய பாட்டைத் திருமால் தன்னைக் கொண்டு பாடுவித்தான்; அல்லது என்னைக் கொண்டு தன்னையே பாடிக்கொண்டான் - என்றெல்லாம் ஏன் சொல்ல வேண்டும்? சிந்தனை எழுகிறது. அதுதான் தொட்டனைத்துறும் மணற்கேணி.