பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 69 என்ன இது! நம்மாழ்வாரே தப்புப் பண்ணிட்டார். 'பாடிய' என்று தன்வினையிலே சொல்றாரே. பாடுவித்த என்று பிறவினையாக அல்லவா இருக்க வேண்டும்? சரவணமுதலியார் சைவர்; பெரிய புராண பக்தர், அவர் மகன் நான். நம்மாழ்வார்லே தப்பு கண்டுபிடிச் சிட்டேன். இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒரு வைஷ்ணவியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... ஒரு மாதம் கழித்து இதுக்கு நம்மாழ்வாரே டேய் சாம்பிராணி இங்கேவாடா என்று அழைத்து விளக்கம் கொடுத்தார். பஞ்சப் புலனி மாமாயன் என்னுள்புகுந்து என்னை விழுங்கித் தானேயாய் பாடினான் - பாடுவிக்கலே. பாடிக்கொண்டான். தன் புகழைத் தானே பாடிக் கொண்டானாம். அது எப்படிப் பாடினான்? ஒரு சிக்கல். அவன் புகழை அவன் பாடினால் உன் காதில் விழாதே. உன் நிலைக்கு அவன் வரணும். . மாமாயன் - ஏற்கெனவே மாயன் - மாமாயன் என்னுள்ளே புகுந்து உள்ளே வந்தான். அது தெரியாது. மாயன் புகுந்தால் அது எப்படித் தெரியும்? என்னுள் புகுந்து - இரண்டு ஆள் உள்ளே இருக்கு. சிலபேர் தாக சாந்தி பண்ணிட்டு எதிரே வரது ஒரு ஆளா, இரண்டு ஆளான்னு தடுமார்றானே. அவனேர் மாயன்? 'என்னுள் புகுந்து - இரண்டு ஆளா இருக்கு. மேலே, 'என்னை விழுங்கி என்றார். இந்த நான் என்பது செத்துப்