பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தொட்டனைத்துறும் மணற்கேணி நாமெல்லாம் தேவராகப் போகணும்னு என்றெல்லாம் சொல்லிட்டு... வள்ளுவர், தேவரெல்லாம் நம்மூரிலே இருக்கிற கீழ்மக்கள் மாதிரி என்கிறார். இரண்டு பேருக்கும் பொது இயல்பு ஒண்னு தான். தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்து ஒழுகலான் (குறள் 1073) நம்மூர் இழிமகன் loaft நினைச்சதைச் செய்யறான். அதே மாதிரி தேவரும் நினைச்சதைச் செய்யறாங்க. இது மாதிரி சொல்லணும்னா வெறும் அனுபவம் மட்டும் போதாது. அதனால்தான், திருவள்ளுவர் பேருண்மை களை விளங்க வைப்பதற்காக இறைவனால் பயன் படுத்திக் கொள்ளப்பட்டுள்ளார் என்று நினைக்கிறேன். பல நாட்கள் சிந்தித்துக் கொண்டேயிருந்தேன். அப்போதான் நம்மாழ்வார் என்னுடைய உதவிக்கு வந்தார். நான் தமிழ்ப் பண்டிதன். எங்கப்பா தமிழ்ப் பண்டிதர். அதனாலே படிக்கும் போதெல்லாம் தப்பு தான் கண்ணுக்குப் படும். அது என் பிறப்புரிமை. அற்புத மாக ஒரு பாட்டு எழுதியிருப்பான். டக்னு தப்புதான் படுது. х . . என்னடா இது நம்மாழ்வாரே தப்பு பண்ணிவிட்டார். பாடினேன் என்றல்லவா சொல்றார். பாடுவித்தான் என்றல்லவா இருக்க வேண்டும். என்னை தன்னால் இன் கவிபாடிய வாட்டாற்றான் என்று பாடுகிற்ார் நம்மாழ்வார்.