பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 67 தாதாய் மூவேழுலகுக்கும் தாயே நாயேன் தனையாண்ட பேதாய் (திருவா:446) நீ முட்டாள் என்கிறார். யாரை சிவபெருமானை. ஏன் என்னைப் பிடித்து ஆட்கொண்டாய். அப்போ நீ தகுதியைப் பற்றிச் சிந்திக்கவில்லை. இந்த மாதிரி ஆட்களைப்பற்றி என்ன சொல்ல முடியும். "அகந்தைக் கிழங்கை - இது எப்படி வந்தது? தோண்டினான். எந்தப் பிறவியிலே? போன பிறவியிலே. தொட்டனைத்துறும் அறிவு என்றால் ஒரு பிறப்பிலே அல்ல - பல பிறப்புகளிலே. ஆக, தொடுதல் என்பது கல்வி என ஏதோ ஒன்றோடு வரையறை பண்ணிக்காதீங்க. எந்தப் பகுதியிலே தோண்டினாலும் அது ஊறிக்கொண்டே யிருக்கும். திருவருள் உங்கள் முயற்சிக்கேற்ப முயற்சி தன் மெய்வருந்தக் கூலி தரும்' என்கிறாரே. அது மாதிரி தோண்டத் தோண்ட நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கேற்பப் - பயன் தரும். இவன் தமிழ் நாட்டிலே இரண்டாயிரத்து நூறு வருஷத்துக்கு முன்னால் பிறந்தான். அவனுடைய அறிவு வீச்சு இருக்கிறதே. அது இந்த உலகத்தை மட்டுமல்ல. அவன் தேவலோகத்தைப் பார்த்தவனோ என்னமோ தெரியலை போனவன் திரும்பி வரலே. யார் என்ன சொன்னாங்க தெரியாது. ஆனால் என்ன தைரியம் இருந்தால் தேவர் அனையர் கயவர். என்று பாடுவார்.