பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தொட்டனைத்துாறும் மண்ற்கேணி என்கிறார். நான் பண்றதைச் சொல்றேன், சார். பேனா வாங்குவேன். பேனா என்றால் அந்தக் காலத்திலே யிருந்து எனக்கு ஒரு பைத்தியம். ஒவ்வொரு தரமும் பேனா வாங்கும்போது ஒவ்வொரு தடவையும் நினைக் கிறது. பேனாவை இங்க்கிலே தோச்சு முருகன் துணைன்னு எழுதணும்னு நெனச்சுக்கிட்டே போவேன். ஆனா அ.சா. ஞானசம்பந்தன்னு எழுதுவேன். அது அவ்வளவு தூரம் இருக்குது. நான் என்ன பண்ண முடியும்? இது தெரிந்துதான் எழுதுகிறார், குமரகுருபரர். அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும் தொழும்பர்களது உளக் கோயிலிலேதான்டா வருவான். இதை நினைக்கிற்ார் இன்னொரு பெரியவர். அருள் பெற்றவர். தனக்கு அருள் பெறத் தகுதி உண்டு என்று கூறும்போதுதான் அவர் பெருமையைப் பார்க்கிறோம். நாயேனையும்இங்கு ஒருபொருளாக நயந்து வந்துநீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய். . (அபி.அ.61) அபிராமிபட்டர் பாடுகிற பாட்டு. என்னை வந்து ஆண்டுகொண்டாயே, தாயே! எனக்கு எந்த விதமான தகுதியும் இல்லை. என்னை நீ ஆண்டுகொள்ளலாமா நாயேனையும் ஒருபொருளாக நயந்துவந்து ஆண்டு கொண்டாய் என்று சொல்லணும். நினைவின்றி ஆண்டு கொண்டாய் என்கிறார், தற்செயலாக, யாருக்கோ அருள் பண்ண வந்தே? நான் மாட்டினேன். மாணிக்கவாசகர் பாடுகிறார்.