பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூல் முகம்

“குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்தபிரான், பரண்
சென்று சேர்திரு வேங்கட மாமலை
ஒன்று மேதொழ நம்வினை ஒயுமே.”[1]

எம்பெருமானைப் பல்வேறு விதமாக அநுபவிக்கலாம். அவற்றுள் ஒன்று அவன் உகந்தருளின திவ்விய தேசங்கட்கு யாத்திரை செய்வதாகும். 1969-ஆம் ஆண்டு சூன் திங்கள் குடும்பத்துடன் தொடங்கிய மலைநாட்டுத் திவ்விய தேச யாத்திரையின் அநுபவம் ‘மலை நாட்டுத் திருப்பதிகள்’’ என்ற நூல் வடிவம் பெற்றது 1971-ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களில். அஃது ஒரே மூச்சில் தொடங்கி நினைவு பெற்ற யாத்திரையாகும். தொண்டை நாடு, நடு நாடு இவற்றிலுள்ள 24 திவ்விய தேசங்களையும் இரண்டு மூச்சில் சேவித்து நிறைவு செய்தேன். 1966-ஆம் ஆண்டு சனவரித் திங்களில் நடு நாட்டிலுள்ள திரு அயிந்திரபுரத்துத் தெய்வ நாயகனையும், அதே ஆண்டு பிப்ரவரித் திங்களில் திருக்கோவலூர் திரிவிக்கிரமனையும் தனியாகச் சேவித்தேன். அதே ஆண்டு சனவரித் திங்களில் என் நண்பர் வடமொழிப் புலவர் திரு. கி. சீநிவாச வரதன் (திருவேங்கடவன் பல்கலைக் கழகக் கீழ்த்திசை ஆராய்ச்சித் துறையில் பணியாற்றுபவர்) அவர்களின் துணைக்கொண்டு காஞ்சியிலுள்ள 14 திவ்விய தேசங்கள், அந்நகரின் அருகிலுள்ள திருப்புட்குழி, மாமல்லைத் தலசயனம், திருவிட எந்தை, திருநீர்மலை ஆகிய 18 திவ்விய தேசங்களைச் சேவித்தேன். பின்னர் 1968-ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் என் மூத்த மகன்

  1. திருவாய்மொழி 3.3:8

viii