பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லிக்கேணி அச்சுதன் 123

என்ற பாசுரத்தைப் பாடிச் சேவிக்கின்றோம். யானை அரசனது துயர் தீர்த்த எம்பெருமான் நம்முடைய துயரையும் தீர்த்தருள வேண்டும் என்று முறையிடுகின்றோம். அன்று யானை தன் உயிர் போகின்றதே என்ற துயரத்தால் அலறவில்லை; வருந்திப் பறித்த தாமரை மலர்களைச் செவ்வி அழியாமல் எம்பெருமானுடைய திருவடியில் சாத்த முடியவில்லையே என்ற கவலையாலேயே அது கதறியது. அந்த யானையின் உணர்ச்சி நமக்கு ஏற்பட வேண்டுமே என்று கதறுகின்றோம்; ஒலமிடுகின்றோம். முதலையினால் அடர்ப்புண்ட யானையின் இடரைத் தீர்ததருளின எம்பெருமான் ஐம்பொறிகளாகின்ற முதலைகளின் வாயில் அகப்பட்டுத் தவித்துத் துடிக்கிற நம்மையும் காத்தருள்வதற்காகத்தான் இங்கு வந்து எழுந்தருளி யுள்ளான் என்று எண்ணி அவன் கருணைத்திறத்தினை வியந்து போற்றுகின்றோம். ‘ஆழி விட்டானை’ என்னாது ‘ஆழி தொட்டானை’ என்றதால் எம்பெருமானுடைய செயலின் இலாகவத்தைத் தெரிவிக்கும் ஆழ்வார் பாசுரத்தின் நயத்தையும் அநுபவிக்கின்றோம்.

இந்த அநுபவத்துடன் அழகிய சிங்கர் சந்நிதிக்கு வருகின்றோம். பார்த்தசாரதிப் பெருமானின் கருவறைக்குப் பின்புறத்தில் மேற்கு நோக்கிய திருமுகமண்டலங் கொண்டு யோக நிலையில் இவர் வீற்றிருக்கின்றார். இவர் அத்திரி முனிவருக்குக் காட்சி கொடுத்த அவசரத்தில் வீற்றிருக்கின்றார் என்பது புராண வரலாறு. இவரை நோக்கி; ‘அன்று பிரகலாதனை ஆட்கொண்ட எம்பெருமானே, அடியேனையும் இன்று ஆட்கொள்ள வேண்டும்’ என்று இறைஞ்சுகின்றோம்.

“பள்ளியில் ஓதி வந்ததன் சிறுவன்

வாயில்ஓர் ஆயிரம் நாமம் ஒள்ளிய ஆகிப் போத,ஆங்(கு) அதனுக்கு

ஒன்றும்ஒர் பொறுப்பிலன் ஆகி, பிள்ளையைச் சீறி வெகுண்டுதுண் புடைப்பப்

பிறைஎயிற்று அனல்விழிப் பேழ்வாய் தெள்ளிய சிங்கம் ஆகிய தேவைத்

திருவல்லிக் கேணிக்கண் டேனே”

(ஒதி-படித்துவிட்டு, சிறுவன்-பிரகலாதன், நாமம்-திருப்பெயர்: ஒள்ளிய ஆகி

- அழகுடன் ஒன்றும்-உள்ளளவும்: பொறுப்பிலன் ஆகி -பொறுக்க மாட்டா தவன் ஆகி; வெகுண்டு-சினந்து; பிறை எயிறு-பிறைபோன்ற பற்கள்: அனல்

10. பெரி. திரு. 2. 3:8.