பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லிக்கேணி அச்சுதன் 127

இடமாதலால் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்... திருவல்லிக்கேணி என்று சிறப்பித் தார் என்பதையும் நினைந்து மனம் உருகுகின்றோம்.

அடுத்து, இடப்பக்கம் திரும்பியதும், தம்பிமார்கள் மூவர், துணைவியார், அநுமன் இவர்கள் சமேதராக நமக்குச் சேவை சாதிக்கின்றார் சக்கரவர்த்தி திருமகன். இராமர் இத்திருக் கோயிலுக்குள் குடிபுகுந்தமைக்கும் ஒரு வரலாறு வழங்கி வருகின்றது. சசிபதர் என்ற முனிபுங்கவர் ஒருவர் பாண்டாரம் என்னும் மலையில் தவம்புரிக்கின்றார். அவர்தவத்தைக் குலைக்க ஹேலை என்ற தேவகன்னிகை வருகின்றாள்; முனிவர் தவமும் கலைகின்றது. பொறிகள் அவரை ஆட்கொள்ளுகின்றன. அவர்கட்கு ஒர் ஆண் மகவும் பிறக்கின்றது. இருவரும் குழவியை விட்டுப் பிரியவே, அது மரத்தினின்றும் சொட்டும் தேனை உட்கொண்டே வளர்ந்து ‘மதுமான்’ என்ற பெயரையும் பெறுகின்றது. இந்த மதுமானுக்குக் காட்சி தந்து அவனை ஆட்கொள்வதற்காகவே அன்று மாயமானைத் தொடர்ந்து சென்ற இராமர் இங்குத் தம் சுற்றம் சூழ எழுந்தருளியுள்ளார். இந்த இராமச்சந்திரனை,

‘பரதனும் தம்பி சத்துருக் கனனும்

இலக்கும னோடுமை திலியும் இரவுநன் பகலும் துதிசெய்ய நின்ற

இராவணாந் தகனைஎம் மானை, குரவமே கமழும் குளிர்பொழி லுடு

குயிலொடு மயில்கள்நின்(று) ஆல, இரவியின் கதிர்கள் நுழைதல்செய் தறியாத் திருவல்லிக் கேணிக்கண் டேனே’

(மைதிலி-மிதிலைச் செல்வி, சீதை இராவண அந்தகன்-இராவணனுக்கு

யமன் (இராமன்); குரவம்-ஒருமலர், கமழும்-வாசனை வீசும்; பொழில் -

சோலை; ஆல- ஆரவாரிக்க; இரவ-சூரியன்)

என்ற பாசுரத்தைப் பாடிச் சேவிக்கின்றோம். பரதன் முதலிய நால்வரைச் சொல்லியது மற்றுமுள்ள வாணர முதலிகட்கும், முனிக்கணங்கட்கும், பிறருக்கும் உபலட்சணமாகும். இவர்கள் யாவரும் இராவணவதமாகிய வீரச் செயலை நினைந்து இராமரைத் துதிசெய்கிறனர். அந்தக் குழுவில் நாமும் சேர்ந்து

15. பெரி. திரு. - 2. 3: 7.