பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 தொண்டை நாட்டுத் திருப்பதிகள்

கடைந்த காலத்தில் தந்வந்தரி என்னும் தேவ உருவுடன் அமுத கலசத்துடன் பாற்கடலினின்று தோன்றிய பொழுது அசுரர்கள் அமுத கலசத்தை வலிந்து பற்றிக் கொள்ள, எம்பெருமான் மோகினி அவதாரம் கொண்டு அசுரர்களை மயக்கி அவர்களிடமிருந்து கலசத்தைக் கைக்கொண்டு அமுதத்தை அசுரர்கட்கு வழங்கினன்.’ ஆண்டுதோறும் ஆயர்கள் இந்திரனுக்கு எடுத்த எழில் விழவினை மலைக்கு எடுக்குமாறு கண்ணன் பணிக்க, ஆயர்களும் அதனைக் கேட்டு அங்ஙனமே செய்ய, இந்திரன் வெகுண்டு மேகங்களை ஏவி ஏழு நாட்கள் கல்மாரி பெய்விக்க, கண்ணன் குன்றம் ஏந்திக் குடையாகப் பிடித்து ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்தருளினன்.'” எம்பெருமான் அலர்மேல்மங்கையாகிய பெரியபிராட்டியாருக்கு இன்பன்; பூமிப்பிராட்டியாருக்கு இறைவன்; நப்பின்னைப் பிராட்டியின் நாயகன்; ஏனையோர்கட்கெல்லாம் ஒருக்காலும் விட்டு நீங்காத துணைவன்; பாண்டவர்க்காகக் கழுத்திலே ஒலை கட்டித் துது சென்று வாயுரை செய்த வித்தகன். திருமங்கை மன்னனுக்குத் தோன்றாத் துணையாக இருப்பவன்; அவருடைய குலத்துக்கே நாதனாகவும் இருப்பவன்."இங்ஙனம் பரத்துவமும் செளலப்பியமும் பொலியத் திகழும் எம்பெருமான் திருவல்லிக்கேணியில் சேவை சாதிக்கின்ற நிலையை எண்ணி மகிழ்கின்றோம்.

அடுத்து, பாஞ்சாலியின் துன்பத்தைத் துடைத்தற் பொருட்டே கண்ணன் பல்வேறு செயல்களை மேற்கொண்டான் என்பதை ஆழ்வார் அநுசந்தித்ததை நாம் நினைவு கொள்ளு கின்றோம்.

“அர்ச்சுனனுக்குத் தூத்ய சாரத்தியங்கள் பண்ணிற்றும் பிரபத்தி

உபதேசம் பண்ணிற்றும் இவளுக்காக” என்பது ஸ்ரீவசன பூஷணம். துது போனது போரை விளைவிப்பதற்காக; சாரதியாய் நின்றது தேர்க்காலாலே ப்ரதிபrத்ததை (எதிரியை) அழிப்பதற்காக; பிரபத்தியை உபதேசித்தது, ‘போர் செய்யேன்” என்றிருந்தவனை ‘உன்

17. பெரி. திரு. 2.2 : 3 18. மேலது - 2, 3 : 4 19. மேலது - 2, 3 :5 20. ரீவச. பூஷ - சூத்திரம் 23 (புருடோத்தம நாயுடு பதிப்பு)