பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 தொண்டை நாட்டுத்திருப்பதிகள்

நப்பின்னைப் பிராட்டியைத் திருமணம் புணரும் நிமித்தமாக எருது வடிவத்தில் வந்த அசுரர்களைக் கொன்றொழித்த செயலும், உருக்குமினிப் பிராட்டியைத் திருமணம் புணரும் நிமித்தமாக உருக்குமன் முதலிய சில அசுரப் பிரகிருதிகளைப் பங்கப்படுத்திய செயலையும் குறிப்பிடுகின்றார் ஆழ்வார். ‘அன்றாயர் குலக்கொடியோடு அணிமாமலர் மங்கையொடு அன்பளவி’ என்று பாசுரத்தைத் தொடங்குவதனால் திவ்விய தம்பதிகளின் சேர்த்தி ஆழ்வார் திருவுள்ளத்தில் ஊறியிருந்து மேற்காட்டிய திருக்கூடலூர்ப் பதிகப் பாசுரத்தில் ‘கலைவாழ் பிணையோடனையும்’ என்று மற்றொன்றைக் குறித்துச் சொல்வதுபோல் (அற்யாபதேசம் - ஒன்றைக் கூறி மற்றொன் றைப் புலப்படுத்தல்) கூறப் பெறுகின்றது என்று கருதலாம்.

இந்த நிலையில் எம்பெருமானின் வெற்றிச் செயல்களில் ஈடுபட்டுப் பாடிய திருமங்கை மன்னனின் இன்னொரு பாசுரமும் நம் நினைவிற்கு வருகின்றது. அதனையும் சிந்திக்கின்றோம்.

“பாராருல கும்பனி மால்வரையும்

கடலும்சுட ரும்இவை யுண்டுமெனக்(கு) ஆராதென நின்றவன் எம்பெருமான்

அலைநீர்உல குக்கர சாகியஅப் பேரானைமு னிந்தமு னிக்கரையன்

பிறரில்லை நுணக்கெனும் எல்லையினான் நீரார்பே ரான்நெடு மாலவனுக்

கிடம்மாமலை யாவது நீர்மலையே’

(பார்-உலகம்; ஆராது-போதாது; முனிக்கு அரையன்-பரசுராமன்)

என்பது பாசுரம். எம்பெருமானின் வெற்றிச்செயல்களில் உலகம் உண்ட செயலும், பரசுராம அவதாரத்தில் கார்த்தவீரியனை வெற்றி கொண்ட செயலும் இருபத்தொரு தலைமுறை கூடித்திரியப் பூண்டு வேரறும்படி செய்த செயலும் இப்பாசுரத்தில் அநுசந்திக்கப் பெறுகின்றன. ஈண்டு ‘நீரார் பேரான்’ என்பது இத்தலத்து எம்பெருமான் பெயராகிய நீர்வண்ணன் என்பதைக் குறிக்கும் சொற்றொடர் ஆகும். எம்பெருமான் நீரின் தன்மையை யுடையவனாதலால் ஆழ்வார் அவன் எழுந்தருளியிருக்கும் தலத்தையே நீரகம்’ என்று கொண்டு, ‘நீரகத்தாய்!” என்றே

24. பெரி. திரு. 5.2 :8 25. மேலது - 2.4:6 26. திருநெடுந் - 8.