பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்மலை நீர்வண்ணன் 441

ஒலமிட்டு அழைக்கின்றார். அடியார்களின் விருப்பத்தை நிறை வேற்றும்பொருட்டு எம்பெருமான் நீர்ப்பண்டமாய் உருகுவானா தலின் அவனுக்கு நீர்வண்ணன்’ என்ற பெயர் மிகவும் பொருத்த மாகும் என்று எண்ணி மகிழ்கின்றோம். ஈண்டு எம்பெரு மானுக்கும் நீருக்கும் உள்ள ஒற்றுமைகளையெல்லாம் தெளிவாக விளக்கும் பிரதிவாதி பயங்கரரின் உரையை நினைத்து போற்றி மனம் கரைகின்றோம்.”

இந்நிலையில் இந்த மலையின் சிறப்பினைக் குறிக்கும் ஆழ்வார் பாசுரம் நம் சிந்தையில் எழுகின்றது; அதனையும் சிந்திக்கின்றோம். ‘திருநீர்மலையின் சிறப்பினைச் சொற்களால் சொல்லித் தலைக்கட்ட முடியாது. நான் சொல்லுவதை இப்போது நீங்கள் கேட்பீர்களாக. இத்திருப்பதி தன்னைப் பணிவார்களின் வினைகளை வேருடன் களைந்து விடுமாதலின், இதுவே நாம் உய்வதற்கு உரிய இடமாகும். புலன் வழியொழுகி மதிகெட்ட நீசர்கள் சென்று கிட்ட முடியாத எம்பெருமான் இங்கு திருக்கோயில் கொண்டுள்ளான். ஆகவே, அவன் இருப்பிடம் செல்வோம், வாருங்கள்’ என்று தம்முடன் ஒத்த மனமுடைய சிலரை அழைக்கின்றார் ஆழ்வார்.

“பேசுமள வன்றிது வம்மின்நமர்!

பிறர்கேட்பதன் முன்பணி வார்வினைகள் நாசமது செய்திடும் ஆதன்மையால்

அதுவேநம துய்விடம் நாள்மலர்மேல் வாசமணி வண்டறை பைம்புறவில்

மனமைந்தொடு நைந்துழல் வார்,மதியில் நீசரவர் சென்றடை யாதவனுக்

கிடம்மாமலை யாவது நீர்மலையே’

(பிறர்-ஈண்டு நாத்திகரைக் குறித்தது; பணிவார்-வணங்குபவர்கள்; ஆதன்மையால் ஆகையால்; உய்தல்-மோட்சம் அடைதல்; வாசம்-மாயம்;

புறவு - சோலை, நைந்து-வருந்தி; மதி.புத்தி, நீசர்-அற்பர்)

என்பது பாசுரம். இதனை நினைந்த வண்ணம் மலையின்மீது ஏறுகின்றோம். படிக்கட்டுகளை அமைப்பதற்கு நன்கொடை அளித்த பல்வேறு அன்பர்களின் பெயர்கள் அமைந்த

27. திவ்வியார்த்த தீபிகை - திருநெடுந் - பாசுரம் 8-இன் உரையின்கீழ்

உள்ள அகல உரையை நோக்கி அறிக.

28. பெரி. திரு . 2.4:9