பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 தொண்டை நாட்டுத்திருப்பதிகள்

பக்தர்களின் கால்துசி பட்டாலுமே போதும் என்று சொல்வதன் தத்துவம் இதுதான். கோடிக்கணக்கான பக்தர்கள் - படித்தவர்கள், படிப்பில்லாத பாமர மக்கள் - விழுந்து புரண்டு வழிபட்ட இடங் களுக்குத் தனியொரு ஆற்றல் உண்டு. உலக வாழ்க்கையையும் ஆசைகளையும் நீக்கியவர்கள் உள்ளம் உருகி ஆடியும் பாடியும் புனிதமாக்கிய தலங்களுக்கு நாமும் சென்று நம் உள்ளத்தை ஆண்டவன் திருவடிகளில் சமர்ப்பித்தால் நம்முடைய கல்மனம் உருகும். ஆகவே அத்தகைய இடங்களில் எங்கும் பரவி நிற்கும் ஈசனை எளிதில் காணலாம்.’

&

‘எந்த இடத்தில் பூமியைத் தோண்டினாலும் நீர் எடுக்கலாம். ஆனால் சில இடங்களில் ஏற்கெனவே கிணறும், குளமும், வாவியும், ஏரியும் தயாராக உள்ளன. அவற்றை நாம் அடைந்து எளிதாக நீர் வேட்கையைத் தணித்துக் கொள்ளலாம் அல்லவா? இத்தகைய நீர் நிலைகளைப் போன்றவையே திருக்கோயில்களும், திவ்விய தேசங்களும். அவ்விடங்களை அடைந்து நம் பக்தி வேட்கையைச் சிரமமின்றித் தணித்துக் கொள்ளலாம். இத்தகைய திவ்விய தேசங்களைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுதல் நம் கடமை. மாடுகள் வயிறு நிறையப் புல்லை மேய்ந்து விட்டு ஒரிடத்தில் படுத்து அசைபோடுவதுபோல் புண்ணியத் தலங்கட்குப் போய் பூசை, பிராத்தனை முதலிய வழிபாடுகளைச் செய்தான பிறகு தல மகிமையின் பயனாக அடைந்த புனித எண்ணங்களை நாம் அசைபோட வேண்டும். யாத்திரை முடிந்ததும் கடமை தீர்ந்து விட்டது என்று கருதிப் பக்தியையும் புனித எண்ணங்களையும் அங்கேயே விட்டுவிடாமல் தனிமையான இடத்தைத் தேடி அமர்ந்து தியானத்தில் மனத்தைச் செலுத்துதல் வேண்டும்; அடைந்த பக்தியை உறுதி செய்து கொள்ளுதல் வேண்டும். இல்லையெனில் அடைந்த பயனை விரைவில் இழந்து விடுவோம்.’

1.'ஆடிப்பாடி அரங்க! ஒ! என்று

அழைக்கும் தொண்டர் அடிப்பொடி ஆடநாம்பெறில், கங்கைநீர்குடைந்து

ஆடும்வேட்கைஎன் ஆவதே” என்ற பெருமாள் திருமொழியின் (2 : 2) பகுதியில் இத்தகைய கருத்து அமைந்துள்ளமை கண்டு மகிழலாம்.