பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்மல்லைக் கிடக்கும் கரும்பு 175

அநுபவித்த வண்ணம் மாலை ஐந்து மணிக்குக் கடற்கரை மணலில் உட்கார்ந்து குளிர்ந்த கடற்காற்று வீச நாம் இளைப்பாறுகின்றோம்.

இந்தக் கடல் மல்லையில் கடற்கரைக் கோயில், ஊரிலுள்ள கோயில், மலையடிவாரத்திலுள்ள கோயில் ஆகிய மூன்றிலும் எழுந்தருளியருக்கும் எம்பெருமான்களைப் பூதத் தாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகிய இரண்டு ஆழ்வார்கள் மங்களா சாசனம் செய்துள்ளனர். ‘ கையிலுள்ள நாலாயிலாரத் திவ்வியப் பிரபந்தத்தை எடுத்து இப்பாடல்களையெல்லாம் ஓதி உளங்கரை கின்றோம். கடற்கரையிலிருந்து ஒதுங்கால் பாசுரங்கள் யாவும் பாற்கடல் ஈந்த ஆராவமுதுபோல் தித்தப்பதை உணர்ந்து மகிழ்கின்றோம். ஆழ்வார்கள் பெற்ற உணர்ச்சி நம்மையும் வந்து கெளவுகின்றது. இந்நிலையில் திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் பாடலும் நம் நினைவிற்கு வருகின்றது.

‘செறிந்த பணைபறித்து திண்களிற்றைச் சாடி முறிந்துவிழப் பாகனையும் மோதி எறிந்து தருக்குஅடல் மல்லைக்குமைந்தான் தஞ்சம் என்று-நெஞ்சே திருக்கடல் மல்லைக்குள் திரி’

(பனை-கொம்பு, களிறு-யானை (குவலயாபீடம்) தருக்கு-செருக்கு; மல்லை - மல்லர்களே, குமைத்தான்-கொன்றான்)

என்ற அப்பாசுரத்தையும் ஒதி மகிழ்கின்றோம். திருக்கடல் மல்லைக்குள் திரிந்தநாம் ‘கண்ணனே தஞ்சம்’ என்று மனவுறுதியையும் கொள்ளுகின்றோம்.

கடற்கரைக் கோயில்களை அடுத்துள்ள கடற்கரை வனப்பு மிக்கது. பழங்காலத்தி இது மிகவும் நீண்டதாக இருந்தது என்றும் எவ்ளவோ பகுதிகளைக் கடல் கொண்டுவிட்டது என்றும் கூறுவர். எஞ்சியுள்ள பகுதியையும் விழுங்கவருவதுபோல் கடலலைகள் கொந்தளித்துக்கொண்டு வந்து மோதுகின்றன. இந்த அலை களையும் கண்டுகளிக்கின்றோம்.

18. இரண். திருவந் 70; பெரி. திரு. 2.5 ; 2.6 : 3.5.8; 7.1:4; திருக்குறுந் -

19; திருநெடுந் 9: சிறிய திருமடல்-கண்ணி 73; பெரிய திருமடல் -கண்ணி - 120.

19. நூற். திருப். அந் - 93.