பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

யாவும் மிகவும் அழகானவை; மிகப் பெரியவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாணியல் நல்ல வேலைப்பாட்டுடன் ஒரே கல்லில் செதுக்கப் பெற்றவை. வடகோடியிலுள்ள இரதத்தைத் தரெளபதி இரதம் என்று சொல்லுகின்றனர். அஃது உண்மையில் துர்க்கையின் கோயில். தேவிக்குத் தலைப்பலியிடும் சிற்பம் அக்கோயிலில் காணப்பெறுகின்றது. இந்த ஐந்து அசையாத தேர்களையும் எத்தனைச் சிற்பிகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்து முடித்தார்களோ? எவ்வளவு செலவு ஆயிற்றோ?

மாமல்லரின் கலையுள்ளத்தை வியந்த வண்ணம் நாம் வந்த வழியிலேயே முன்னர் பார்த்த கைகாட்டி வரை திரும்பி வந்து கிழக்கு நோக்கி நடக்கின்றோம். வழியிலுள்ள சவுக்குத் தோப்புக்களைக் கடந்தால் கடற்கரைக் கோயிலை அடையலாம். இதுகாறும் பார்த்தவை யாவும் கற்பாறைகளை வெட்டிச் செதுக்கியவை; மலையைக் குடைந்து நிறுவியவை. ஆயின், இங்குக் காணும் இரண்டு கோயில்களும் கல்லால் கட்டப் பெற்றவை. ஒன்று சிவபெருமானுடையது; இது கடலின் அருகிலுள்ளது. மற்றொன்று, திருமாலுக்குரியது; சிவாலயத்தை அடுத்து மேற்புறமாக உள்ளது. இரண்டு கோயில்களின் மதிற்கவர்கள் சிதைந்த நிலையில் உள்ளன. கடலலைகளால் தாக்கப்பெற்றதாலும், பேரலைகள் அடிக்கும் போது உப்ஸ்ரீர்த் துளிகள் சிதறப்பெற்றதாலும் கோயிலின் அடியிலிருந்து உச்சி வரையிலும் உள்ள கற்கள அரிக்கப்பெற்றுள்ளன.

சிவன் கோயிலின் கருவறையில் பதினாறு பக்கங்கள்: கொண்ட கருங்கல் இலிங்கம் உடைந்த நிலையில் உள்ளது; இதனால் இதற்குப் பூசை முதலியன நடை பெறுவதில்லை. சோமாஸ்கந்த நிலையில் மலைமகளுடன் வீற்றிருக்கும் சிவபெருமான் சிலையையும் அங்கே காண்கின்றோம். அருகி லுள்ள திருமால் ஆலயத்தில் பள்ளி கொண்ட நிலையில் ‘ஜலசயனனாக இருக்கும் பெருமானின் வடிவம் மிகப் பெரியது. கையில் மின் விளக்கு இருப்பின் இருட்டில் ஒதுங்கிக்கிடக்கும் அவரை நன்கு சேவிக்கலாம். இந்தச் சிலையும் பின்னப்பட்டுக் கிடப்பதால், இதற்கும் பூசை முதலியன இல்லை. இதைப் போன்ற உருவம் ஒன்று மலைமீதுள்ள மண்டபம் ஒன்றில் கல்லில் செதுக்கப் பெற்றுள்ளது. இவற்றையெல்லாம்