பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. திருஅயிந்திரபுரத்துத் தெய்வநாயகன்

எம்பெருமானுடைய அர்ச்சாவதாரம் எப்பொழுதும் நம்மருகில் நிலைபெற்றுக் கண்ணால் கண்டுகளிப்பதற்கு இடந்தருகின்றது.

‘அண்டர்கோன் அணிஅரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணவே.”

என்ற திருப்பாணாழ்வாரின் அநுபவம் இதனை நன்கு உறுதி செய்கின்றது. நாம் எம்பெருமானைப் பற்றுவதற்கு எம்பெரு மானுடைய செளலப்பிய குணமே நமக்குத் துணையாக உள்ளது. அந்த செளலப்பியத்திற்கு எல்லை நிலம் அர்ச்சாவதாரம்.

அர்ச்சாவதாரத்தில் எம்பெருமான் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையனாக இருத்தலைக் காண்கின்றோம். இங்ஙனம் ஆயுதங்களை எப்பொழுதும் தாங்கிக் கொண்டிருத்தல் வன்மைமிக்க வீரனுடைய செயலாகும். தன்னை வந்தடைந்த பக்தர்களின் விரோதிகளைப் போக்குவதற்கு இப்படைகள் பயன்படுகின்றன. இவ்வாயுதங்களைத் தாங்கும் வன்மை மட்டிலும் போதிய தன்று; விரோதிகள் இன்னவை என்பதையும் அவற்றைப் போக்கும் முறைகளையும் நன்கு அறிந்தவனாய் இருத்தல் வேண்டும். எனவே, எம்பெருமான் தன்னைப் பற்றின நம்முடைய காரியத்தைச் செய்யும் பொழுது பயன்படு பவையான ஞானம், சக்தி என்ற திருக்குணங்கட்கு ஒளிதருபவை திவ்விய ஆயுதங்கள் என்று அறிகின்றோம்.

நாம் செய்த குற்றங்களை நினைத்துஅந்தோ! இத்தனைப் பிழைகளை இழைத்த நாம் எங்ஙனம் அத்துணை உயரிய எம்பெருமானைச் சென்றடைவது?’ என அஞ்சி அகலாதிருத்தற் பொருட்டே அவருடைய திருக்கை அபயமுத்தரையுடன் சேவை

1. நடுநாட்டுத்தலம் அமலனாதி - 10

தொ.நா-12