பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

(அந்தம்-முடிவு: சீர்-பெருமை அடிஉரை-வடமொழி, ஐம்பது

தேவநாயக பஞ்சாசத்; பிராகிருதம் நூறு-அச்யுதசதகம்; முகுந்தன்-போக

மோட்சங்களை அளிப்பவன்)

என்ற அவர் பாசுரத்தாலேயே அறியலாம். மும்மணிக் கோவையிலுள்ள இருபது பாசுரங்களும் பந்து, கழல், அம்மானை, ஊசல், ஏசல் ஆகிய பிரபந்தங்கள் ஐந்தும் இப்போது அருகிவிட்டன. தெய்வ நாயகன்மீது தேசிகனுக்குள்ள அளவிலாக் காதலால் ஆழ்வார்களைப் போலத் தாமும் பெண் தன்மையை ஏறிட்டுக் கொண்டு தோழி, செவிலி இவர்களின் பேச்சாகப் பாடியருளிய சில பாசுரங்கள் நம் மனத்தைப் பெரிதும் கவர்வனவாக உள்ளன.

இவற்றையெல்லாம் நினைந்த வண்ணம் திருக்கோயிலின் வெளிப் பிராகாரத்தில் அமைதியான ஓரிடத்தில் அமர்கின்றோம். திருக்கோயிலின் அலுவலர் ஒருவர் மூலம் சில செய்திகளை அறிகின்றோம். ஆண்டுதோறும் சித்திரை மாதம் தெய்வநாய கனுக்கு ஒரு பிரம்மோத்சவமும், புரட்டாசி மாதம் சுவாமி தேசிகனுக்கு ஒரு பிரம்மோத்சவமும், மார்கழி மாதத்தில் 21 நாட்கள் திருமொழி - திருவாய்மொழித் திருநாளும் (பகல் பத்து-இராப்பத்து) நடைபெற்று வருகின்றன. இவற்றைத் தவிர சிறப்பாக நடைபெறுவது மாசிமகம் உற்சவம் ஆகும். திருக்கோயிலுக்குச் சுமார் முந்நூறு ஏக்கர் நிலம் நிவந்தமாக இருப்பதாகவும். அதினின்றும் சுமார் ஐம்பதாயிரம் ரூபாய்வரை வருமானம் வருவதாகவும் அந்த வருமானத்ததைக்கொண்டும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தொகைகளைக் கொண்டும்

இந்தத் திருவிழாக்கள் நன்கு நடைபெற்று வருகின்றன.

திருவயிந்திரபுரத்துச் சோழர் காலச் கல்வெட்டொன்று’ சோழர் வரலாற்றை அறியத் துணை செய்கின்றது. மூன்றாம் இராசராசசோழன் (கி.பி. 1216-1256) சுந்தர பாண்டியனால் தோற்கடிக்கப்பட்டான். அவன் தன் நண்பன் குந்தள நாட்டரசனாகிய வீர சிம்மனிடம் உதவிபெறும் பொருட்டு வடதிசையை நோக்கிச்செல்லும் பொழுது, காடவர்குல மன்னன் (பல்லவன்) கோப்பெருங்சிங்கன் இவனைத் தெள்ளாறு என்ற இடத்தில் எதிர்த்துவென்று தன் தலைநகராகிய சேந்த மங்கலத்தில் சிறையிட்டனன். இதனைக் கேள்வியுற்ற வீர நரசிம்மன் தன் படைத் தலைவர்களாகிய அப்பண்ண தண்ட நாயகன், சமுத்திர

36. Epigraphia Indica Vol VII pp (1 67-68.)