பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கச்சிக் கார்மேனி அருளாளர்

3

கொண்டான். உடனே அத்திகிரியை யாகவேதியாகவும், யாகத்திற்கு வரும் தேவர் முதலியோர் நெருக்கமின்றி வசிப்பதற்கு ஏற்ற நகர் ஒன்றையும் விரைவில் நிறுவுமாறு கட்டளையிட்டான். அங்ஙனமே விரைவில் அமைக்கப் பெற்ற அழகிய நகரைக் கண்டு நான்முகன் மகிழ்ந்தான். அசுவமேத யாகத்தையும் விரைவில் முற்றுவித்தான். அந்த யாக குண்டத்தினின்னும் எழுந்த பொன்னாலாகிய மலைபோன்ற புண்ணியகோடி விமானத்தில் நித்திய சூரிகளின் தலைவனான வரதராசன் தோன்றி நான்முகனுக்குக் காட்சி அளித்தான். அந்த எம்பெருமானின் திவ்விய மங்கள விக்கிரகத்தை அநுபவித்த நான்முகன்.

“திருமகள்மண் மகள்நீளை முதலா வெல்லாத்
           தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்கத்
தருமமிகு மூன்றுமுதல் அனைத்தும் தோன்றத்
           தன்னனைய சூரியர்தன் அடிக்கீழ் வாழ
அருமறைசேர் அளவில்லா அவனி யின்கண்
           அரவணைமேல் வீற்றிருப்பால் அனைத்தும் காக்கும்
கருமணியைக் கரிகிரிமேல் கண்டேன் என்றன்
           கடுவினைகள் அனைத்தும்நான் கண்டிலேனே.[1]

(தருமம்-குணங்கள்; இருமூன்று-ஆறு (ஞானம், சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம், தேஜல்); சூரியர்-நித்திய சூரியர்; அவனி-பூமி (நித்திய விபூதி); அரவு அணை-பாம்புப் படுக்கை; கருமனி-நீல இரத்தினம்; கரிகிரி-அத்திகிரி)

என்று அநுபவித்துப் பேசி இனியனாகின்றான். தன் கர்மங்கள் யாவும் ‘தீயினில் தூசாயினதைக்’ கண்டு வியந்து போற்று கின்றான். அதன் பிறகு அவனுடைய திருக்குணங்களில் ஈடுபாடு,

“வேர் ஒப்பார் விண்முதலாம் காவுக் கெல்லாம்;
           விழியொப்பார் வேதம் எனும் கண்த னக்கு;
கார் ஒப்பார் கருணை மழை பொழியும் நீரால்;
           கடல் ஒப்பார் கண்டிடினுங்க காணாக் கூத்தால்;
நீர்ஒப்பார் நிலம் அளிக்கும் தன்மை தன்னால்;
           நிலம் ஒப்பார் நெடும்பிழைகள் பொறுக்கும் நேரால்;
ஆர்ஒப்பார் இவர்குணங்கள் அனைத்தும் கண்டால்;
           அருளாளர் தாம்எனினும் தமக்குஒவ் வாரே”[2]

  1. தேசி. பிரபந்-227
  2. தேசி. பிரபந்-229