பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

வல்லார்க்கு இடம் வைகுந்தம்’ என்ற பல சுருதிப் பாசுரப்

பகுதியை நினைந்த வண்ணடம் மனஅமைதி பெறுகின்றோம். அர்ச்சகரிடம் தீர்த்தமும் திருத்துழாயும் பெற்றுச் சடகோபம் சாதிக்கப்பெற்றுக் கருவறையினின்றும் வெளியே வருகின்றோம். இத்தலத்து எம்பெருமானின் திருநாமம் ஆதிகேசவப் பெருமாள் என்பது. நின்ற திருக்கோலத்தில் மேற்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றான் எம்பெருமான்.

எம்பெருமானைச் சேவித்த நாம் தாயார் சந்நிதிக்கு வருகின்றோம். அலர்மேல் மங்கை என்பது தாயாரின் திருநாமம். அவரையும் வணங்கிப் பிரசாதம் பெற்றுத் திரும்புகின்றோம்.

காஞ்சியிலுள்ள திவ்விய தேசங்களை அறிமுகப்படுத்து வதற்காகவே என்னுடன் திருப்பதியினின்றும் வந்த என் அரிய நண்பர் திரு. கே. சீனிவாசவரதன் மீண்டும் எங்களை ஆழ்வார்கள் எழுந்தருளியிருக்கும் மகாமண்டபத்திற்கு இட்டுச்செல்லு கின்றார். மீண்டும் ஆழ்வார்களைச் சேவிக்கின்றோம். திருமொழி - திருவாய்மொழித் திருநாளை (பகல் பத்து - இராப்பத்து) ஏற்படுத்தின நாதமுனிகளின் பரந்த நோக்கத்தையும் திவ்விய பிரபந்தத்தின்பால் அவர் கொண்டுள்ள பக்தியையும் நினைந்து போற்றுகின்றோம்.

திருக்கோயிலின் வெளிப்பிராகாரத்தில் ஒர் அமைதியான இடத்தில் அமர்கின்றோம். திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் அவர்களின் இத்திருத்தலம் பற்றிய,

“என்றும் துயருழக்கும் ஏழைகாள்! நீங்கள்இளம் கன்றுபோல் துள்ளிக் களித்திரீ - அன்றுநடம் இட்ட புயங்கத்து இருசரன மேசரண்என்(று) அட்ட புயங்கத்தற்கு ஆள்ஆய்.”

(என்றும் எப்பொழுதும்; துயர்-துன்பம்; இரீர்-இருங்கள்; அன்று முற் காலத்தில்; நடம் இட்ட-நடனம் ஆடிய புயங்கம்-பாம்பு (காளியன்); இருசரணம் - இரண்டு திருவடிகள்; திருவட்டபுயங்கம்-திருப்பதியின் பெயர்; ஆள் ஆய அடிமையாக)

என்ற பாசுரம் நினைவிற்கு வர அதனையும் ஒதி உளங்கரைகின்றோம். காளியன்மீது களித்துக் கூத்தாடிய கண்ணனே அட்டபுயகரத்து ஆதியாக எழுந்தருளியுள்ளான்

22. பெரி. திரு. 2.9 :10, 23. நூற். திருப் அந்-75