பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகளந்தபெருமாள் 41

என்ற பாசுரம் நினைவிற்கு வருகின்றது. ஆம்; உண்மையே. அத்திருவடிகளின் பெருமையைப் பேசுவதற்கு உலகிலுள்ள மொழிகளின் வளம் போதாது; நமக்கும்- ஏன்? வழிவழி வரும் மானிடவர்க்கத்திற்கும்- ஆயுள் போதாது. இந்தத் திருப் பாசுரத்தை நினைத்த வண்ணம் காஞ்சிப் பேருந்துநிலையத்திற்கு அருகிலுள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயிலை நோக்கி வருகின்றோம்.

இந்த உலகளந்த பெருமாள் கோயில் பெரிய காஞ்சியில் (சிவகாஞ்சி) நான்கு இராஜவீதிகள் சூழ ஊரின் நடுவே அமைந்துள்ளது. இருப்பூர்தி நிலையத்திலிருந்து சுமார் நான்கு ஃபர்லாங் தொலைவில் உள்ளது இத் திருக்கோயில். இதன் கீழ்த்திசையில் வைகுண்டப் பெருமாள் திருக்கோயிலும் மேற்குப் புறமாகப் காமாட்சி அம்மன் திருக்கோயிலும் அமைந்துள்ளன. உலகளந்த பெருமாள் கோயிலின் வெளிப் பிராகாரத்தில் மூன்று சந்நிதிகள் உள்ளன. இவையும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்றவை. முதலில் பிராகாரத்திலுள்ள எம்பெருமான்களைச் சேவிக்க முற்படுகின்றோம்.

திருநீரகம்: வடக்குப் பிராகாரத்திலுள்ள நீரகத்தான் சந்நிதிக்கு வருகின்றோம்; நீரின் தன்மையுடையவனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் தலமாதல் பற்றி ‘நீரகம்’ என்ற திருநாமம் பெற்றதாகப் பெரியோர் பணிப்பர். நீருக்கும் எம்பெருமானுக் கும் பலபடிகளில் ஒற்றுமை உண்டு. ஒரு சிலவற்றை மட்டிலும் ஈண்டுச் சிந்திக்கின்றோம்.

1. நீர் பள்ளத்தை நோக்கித் தானே இயல்பாகப் பாயும்; மேட்டில் ஏறுவது அருமை. எம்பெருமான் சாதி முதலியவற்றால் குறைந்த நிலையையுடையாரிடத்தில் எளிதாகச் செல்லுவன்; உயர்ந்தோம் என்று மார்பு நெறித்திருப்பாரிடத்துச் செல்ல விரும்பாதவன். எம்பெருமான் பாண்டவர்கட்காகக் கழுத்திலே ஒலை கட்டித் துது சென்றபொழுது “ஞானத்தால் சிறந்தோம்’ என்றிருந்த வீட்டுமனின் இருப்பிடம் செல்ல விரும்பவில்லை. ‘குலத்தால் சிறந்தோம்’ என்று கருதியிருந்த துரோணரின்

5. இதற்கு ‘ஊரகம்’ என்ற மற்றொரு திருநாமமும் உண்டு. இத்தலத்தில் எம்பெருமான் உரகவடிவமாகவும் சேவை சாதிப்பதால் இப்பெயர் ஏற்பட்டது என்பர். உரகம்-பாம்பு,