பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

மாதல்பற்றி இதற்குக் காரகம்’ என்ற திருநாமம் பெற்றதாகக் கூறுவர் பெரியோர். ஆகவே, மேகத்திற்கும் எம்பெருமானுக்கும் உள்ள சில பொதுத் தன்மைகளைச் சிந்திக்கின்றோம்.

1. மின்னலுள்ள பொழுது மேகத்தில் நீர் நிரம்பியிருக்கும்; எம்பெருமானுக்கும் பிராட்டியுடன் கூடியிருக்கும் காலத்தில் கருணைவெள்ளம் விஞ்சியிருக்கும். ‘இவன் சந்நிதியாலே காகம் தலை பெற்றது; அது இல்லாமையால் இராவணன் முடிந்தான்’ என்ற முமுட்சுப்படி வாசகம் காண்க.

2. பெய்யாத காலத்தில் வறப்பது மேகம்; எம்பெருமானும் திரெளபதிக்கு ஆபத்தில் அருகேயிருந்து உதவப்பெறாமைக்காக நெஞ்சுலர்ந்து பேசினான்.

3. “எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள், மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும்’ என்றவாறு பயிர்கள் வேறு புகலற்று எதிர்பார்க்கப் பெற்றிருப்பது மேகம். அங்ஙனமே எம்பெருமானும் ‘'களைவாய் துன்பம்; களையாது’ என்று வேறு புகலிடம் இல்லாதவர்களால் எதிர்பார்க்கப் பெறுபவனாக இருப்பான்.

4. மேகம் பெய்யும் காலத்தை அறுதியிடவல்லார் எவரும் இலர். பெய்யவேண்டிய காலத்தில் பெய்யா தொழியும்; பெய்வதற்குச் சந்தர்ப்பம் இல்லாத காலத்தில் பெய்யவும் கூடும். எம்பெருமானும் அப்படியே ‘வந்தாய் போல வாராதாய்; வாராதாய்போல் வருவானே.’ திரெளபதிக்கு ஆபத்திலே வந்து முகங்காட்டா தொழிந்தான். எதிர்பாராத நிலையில் ‘தாவியன்று லகம் எல்லாம் தலைவிளாக் கொண்டான்.’

5. மேகம் துதுவிடப்பெறும் பொருளாக அமையும். எம்பெருமானும் ‘இன்னார் தூதன் என நின்றான்.’

6. மேகம் மாரிகாலத்தில் இடி முழக்கிப் பெய்யாதும் போய்விடும்; பெய்யுங்காலத்தில் ஆடம்பரமின்றிப் பெய்யும். எம்பெருமானும் குசேலனுக்கு அருள்புரிந்தது இங்ஙனமே அன்றோ?

12. முமுட்சு 135. 13. பெரு. திரு.5:7 14. திருவாய் 5.8:8 15. மேலது - 6.10:9 16. பெரி. திரு- 2.2:3