பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகளந்தபெருமாள் 43

இங்ஙனம் பல உவமைப் பொருத்தங்களைக் காணலாம்.” இத்தலத்து எம்பெருமானையும் திருமங்கையாழ்வார் மட்டி லுமே “நீரகத்தாய்’ என்று ஒரே சொல்லால் மங்காளாசாசனம் செய்துள்ளார். கிழக்கே திருமுக மண்டலங்கொண்டு நின்ற திருக்கோலத்தில் நிலமங்கைவல்லித் தாயாருடன் காட்சிதரும் ஜகதீசப் பெருமானைச் சேவிக்கின்றோம்.

“ஆலத் திலைசேர்ந்(து) அழிஉலகை உட்புகுந்த காலத்தில் எவ்வகைநீ காட்டினாய் - ஞாலத்துள் நீர்அகத்தாய்! நின்னடியேன் நெஞ்சகத்தாய் நீள்மறையின் வேர்,அகத்தாய்! வேதியற்கு மீண்டு

(ஆலத்து இலை-ஆல் இலை; அழி உலகு-அழித்து போன உலகம்; உட்புகுந்த காலத்தில் - உன் திருவயிற்றில் புகுந்த காலத்தில்; ஞாலம்-உலகம்; நீள் மறை - நீண்ட வேதம்; வேதியற்கு-மார்க்கண்டேய முனிவனுக்கு)

என்ற திவ்வியகவியின் பாசுரத்தையும் ஓதி உள்ளம் நெகிழ்கின் றோம். என்றும் பதினாறாக நீண்ட ஆயுள் பெற்ற மார்க்கண்டேய முனிவன் பத்திர நதிக்கரையில் தவம் புரிந்துப் பிரளயக் காட்சியைக் காணுமாறு நர நாராயணர்களால் அநுக்கிரகிக்கப் பெற்றான். மாயவன் மாயையால் பிரளயம் தோன்றியது. அப்பிரளயப் பெருங்கடலில் பலவாறு வருந்திய அம் முனிவனுக்கு அவ்வெள்ளத்தில் ஆலிலையின்மீது ஒரு குழந்தை வடிவமாய் அறிதுயிலில் அமர்ந்த நிலையில் காட்சியளித்தான் எம்பெருமான். இந்த வரலாற்றை நினைவிற் கொண்டு அய்யங்கார் அவர்கள் ‘நீ முன்பே அழிந்த உலகங்களையும் நிலைத்திணை இயங்குதினைகளையும் உன் திருவயிற்றிற் காட்டியது என்ன ஆச்சரியம்?’ என்று எம்பெருமானின் திவ்விய குணத்தில் ஆழங்கால் படுகின்றோம். இந்த நிலையில் அடுத்த சந்நிதியாகிய திருக்காரகத்திற்கு வருகின்றோம்.

திருக்காரகம்: இது தாயார் சந்நிதிக்கு எதிரில் உள்ளது. மேகத்தின் தன்மைகள் போன்றவற்றைக் கொண்ட திருக்குணங்கள் நிறைந்த எம்பெருமான் கோயில் கொண்ட தல

9. மேலும் அறிய விரும்புவோர் திவ்வியார்த்த தீபிகை-திருநெடுந் -8

(உரை காண்க.)

10. திருநெடுந் - 8 11. நூற் . திருப். அந்-79.